வயநாட்டில் கேரள அண்ணாமலையை இறக்கிய பாஜக! ராகுலுக்கு காத்திருக்கும் அமில சோதனை! யார் இந்த சுரேந்திரன்
டெல்லி: வயநாடு லோக்சபா தொகுதியில் கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனை வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் மாநில தலைவரையே நேரடியாக களமிறக்கியிருப்பதன் மூலம் ராகுலுக்கு கடும் போட்டியை அளிக்க பாஜக வியூகம் வகுத்துள்ளது தெரியவந்துள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த அகையில், மத்தியில் ஆளும் பாஜக இன்று 5-வது கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

111- தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக இன்று வெளியிட்டது. இதில் சில முக்கிய பிரமுகர்களும் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக கங்கனா ராணாவத்த்திற்கு இமசாலா பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகையான கங்கனா ரணாவத், பாஜக ஆதரவு நிலைப்பாடு கொண்டவராக உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் ராகுலுக்கு எதிராக பாஜக யாரை நிறுத்தும் என்பது தொடர்பாக தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனெனில் முதல் கட்ட வாக்களர் பட்டியலிலேயே கேரளாவில் பெரும்பான்மை தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது இருந்தாலும் வயநாடு தொகுதியில் யார் என்பதை வெளியிடாமல் இருந்தது.
கங்கனா ரனாவத், ராகுலின் சித்தி மேனகா காந்தி போட்டி.. வெளியானது பாஜகவின் 5வது வேட்பாளர் பட்டியல்
இந்த நிலையில், இன்று வெளியான 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலில் வயநாடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, வயநாடு தொகுதியில் கே சுரேந்திரன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் கே சுரேந்திரன் (வயது 54) காசர் கோடு பகுதியை சேர்ந்தவர். பட்டதாரியான இவர் கல்லூரி படிக்கும் காலத்திலேயே ஆர்.எஸ் எஸ் அமைப்பின் மாணவ அமைப்பான ஏபிவிபியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
அதன்பிறகு பாஜகவில் இணைந்த சுரேந்திரன் பல்வெறு போராட்டங்களை முன்னின்று நடத்தி கேரள அரசியலில் கவனம் பெற தொடங்கினார். இதன் மூலம் படிப்படியாக கட்சியிலும் இவருக்கு பொறுப்புகள் கிடைத்தன. கடந்த 2020 ஆம் ஆண்டு கேரள மாநில பாஜக தலைவராக சுரேந்திரன் நியமிக்கப்பட்டார்.
2019 ஆம் ஆண்டு பாராளுமன்ர தேர்தலில் பத்தினம் திட்டா தொகுதியில் போட்டியிட்ட சுரேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ ஆண்டனிடம் தோல்வி அடைந்தார். தற்போது ராகுல் காந்திக்கு எதிராக வயநாடு தொகுதியில் சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ராகுல் காந்தியை வீழ்த்தும் வியூகம் வகுத்த பாஜக, கேரள மாநில பாஜக தலைவரையே நிறுத்தியிருப்பதன் மூலம் அவருக்கு கடும் போட்டியை கொடுக்க திட்டமிட்டுள்ளது.
வயநாடு தொகுதியில் ஆளும் இடது சாரிகள் கூட்டணி சார்பில் ஆன்னி ராஜா போட்டியிடுகிறார். இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி ராஜாவின் மனைவி ஆவார். தற்போது வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து நிற்க கூடிய இரண்டு பேருமே பரிட்சயமான வேட்பாளர்கள் என்பதால் அங்கு ஆசிட் டெஸ்ட் காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications