டெல்லியில் 40 இடங்களின் பெயர்களை மாற்றுங்கள்.. பாஜக திடீரென போடும் பிளான்.. இப்படி ஒரு காரணமா?
டெல்லி: ‛‛டெல்லியில் உள்ள 40 இடங்களின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும். இது அடிமைத்தனத்தின் சின்னமாக இருப்பதால் மாற்றம் நிச்சயம் தேவை'' என பாஜக விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசிடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி ஜஹாங்கிர்புரியில் ஏப்ரல் 16ல் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. ஜஹாங்கிரிபுரியில் வைத்து இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக வெடித்தது.
இதில் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக டெல்லி போலீசார் 2 தரப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஜாஹாங்கிரிபுரியில் ஆக்கிரமிப்பு
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பாஜகவின் தலைவர் ஆதேஷ் குப்தா, டெல்லி வடக்கு மற்றும் கிழக்கு மாநகராட்சியின் மேயர்களுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து வடக்கு மாநகராட்சி சார்பில் வன்முறை வெடித்த ஜஹாங்கிரிபுரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இங்கு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நிலையில் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதற்கிடையே உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றுவது நிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடிமைத்தனத்தின் சின்னம்
இந்நிலையில் தான் டெல்லியில் உள்ள சில பகுதிகளின் பெயர்கள் சரியில்லை. அதனை மாற்றம் செய்ய வேண்டும் என டெல்லி பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து டெல்லி பாஜகவின் தலைவர் ஆதேஷ் குப்தா கூறியதாவது: டெல்லியில் சில பகுதிகளின் பெயர்கள் அடிமைத்தனத்தின் சின்னமாக உள்ளன. இதனை மாற்றம் செய்ய விரும்புகிறோம். இதுதொடர்பாக டெல்லி மாநகராட்சி மேயர், கமிஷனர்களுக்கு கடிதம் எழுத உள்ளோம்.

40 பெயர்கள்
இதில் டெல்லியில் உள்ள 40 இடங்களின் பெயர்கள் இடம்பெற உள்ளது. ஹுமான்யூன்பூர், யூசுப்சராய், மசூத்பூர், ஜம்ருத்பூர், பேகம்பூர், பதேபூர் பெரி, ஹவுஸ்காஸ், ஷேக் சராய் உள்ளிட்டவை அடங்கும். இந்த இடங்களின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என பல கோரிக்கைகள் வந்துள்ளன. இதனால் இந்த பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் என டெல்லி மாநகராட்சி மேயர்களுக்கு கடிதம் எழுத உள்ளோம்.

குறிப்பிட்ட சமுதாயத்தை மகிழ்விக்க...
மேலும் அதற்கான முன்மொழிவை டெல்லி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பெயர் மாற்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கவுன்சிலர்களிடமும் கேட்டு கொள்கிறோம். டெல்லி ஆம்ஆத்மி கட்சி குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்களை மகிழ்விக்கும் வகையில் செயல்படுகிறது. அதனால் தான் முகமதுபூர் பகுதியின் பெயரை மாதவ்புரம் என மாற்ற டெல்லி தெற்கு மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் கிடப்பபில் போடப்பட்டுள்ளது'' என்றார்.

விரும்பாத பாஜக
இதுபற்றி ஆம்ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ‛‛பெயர் மாற்றம் தொடர்பான முன்மொழிவு பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட துறை மூலம் உரிய மதிப்பாய்வு செய்யப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படும். டெல்லியில் ஆம்ஆத்மி அரசு முறையாக செயல்படுவதை பாஜக விரும்பவில்லை. இதனால் தான் அக்கட்சியினர் ரவுடிகள் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை தேடி அலைவதாக நினைக்கிறேன்'' என்றார்.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications