மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து.. 3 மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சியில் பாஜக!
மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியில் தொடருகிறது.
டெல்லி: சட்டசபை தேர்தல்கள் நடைபெற்ற மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலுமே பாஜக ஆட்சியில் மீண்டும் அமர்ந்திருக்கிறது.
மேகாலயா, நாகாலலாந்து. திரிபுரா 3 மாநிலங்களிலுமே தலா 60 தொகுதிகள் உள்ளன. மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு தொங்கு சட்டசபை உருவானது.

மேகாலயாவில் தேர்தலுக்கு முன்னர் என்பிபி, பாஜக கூட்டணி ஆட்சி இருந்தது. தேர்தலின் போது இந்த கூட்டணி பிளவுபட்டு தனித்தனியே தேர்தலை சந்தித்தன. இந்த தேர்தலில் முதல்வர் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சிக்கு 26 இடங்கள் கிடைத்தன. ஆனால் பெரும்பான்மைக்கு தேவை 31 இடங்கள். இதனால் தொங்கு சட்டசபை உருவானது. உடனடியாக பழைய கூட்டணி கட்சியான 2 இடங்களில் வென்ற பாஜகவை கூட்டணிக்கு மீண்டும் அழைத்தது என்பிபி. மேலும் என்பிபியின் இன்னொரு பழைய கூட்டணி கட்சியான யுடிபி 11 இடங்களில் வென்றது. இதனால் தற்போது கூட்டணிகள் ஆதரவுடன் என்பிபி மேகாலயாவில் ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில் மீண்டும் கூட்டணி ஆட்சியில் பாஜக இணைந்து கொள்கிறது.
திரிபுராவைப் பொறுத்தவரையில் பாஜக 32 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 1 இடத்திலும் வென்றுள்ளது. இதனால் திரிபுராவிலும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுவிட்டது. திரிபுராவில் எதிர்க்கட்சிகளான இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைத்திருந்தன. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை திப்ரா மோதா சிதறடித்தது. திப்ரா மோதா 13 இடங்களில் வென்றது. இதனால் பாஜகவின் வெற்றி திரிபுராவில் இயல்பாகவே சாத்தியமாகிவிட்டது.
நாகாலாந்து மாநிலத்திலும் பாஜக கூட்டணி கட்சிதான் அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கிறது. பாஜக மட்டும் 12 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. அதன் கூட்டணி கட்சியான என்டிபிபி 25 இடங்களில் வென்றது. கடந்த தேர்தலில் இந்த கூட்டணி மொத்தம் 30 இடங்களில்தான் வென்றிருந்தது. நாகாலாந்து வரலாற்றில் முதல் முறையாக 2 பெண்கள் எம்.எல்.ஏக்களாகி உள்ளனர். இந்த இருவருமே பாஜகவின் கூட்டணி கட்சியான என்டிபிபியை சேர்ந்தவர்கள்.
மேகாலயா, நாகாலாந்து, திரிபுராவில் காங்கிரஸ் கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லை என்றே கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி உயிர்ப்புடன் இருக்கிறது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications