திடீரென எழுந்த புகைச்சல்.. 2 முக்கிய மாநிலங்களில் நோ கூட்டணி.. அதிர்ச்சியில் "இந்தியா"! என்னாச்சு
டெல்லி: எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள "இந்தியா" கூட்டணி ஒவ்வொரு முடிவையும் திட்டமிட்டு எடுத்து வரும் நிலையில், தொகுதிப் பங்கீட்டில் அவர்களுக்குப் பெரிய பின்னடைவு ஏற்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து "இந்தியா" கூட்டணியைத் தொடங்கியுள்ளன. லோக்சபா தேர்தலுக்காக அவர்கள் இப்போது இருந்தே மெல்ல நடவடிக்கை எடுத்து வந்தன.

ஏற்கனவே தொகுதிப் பங்கீடு குறித்த முதல் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே "இந்தியா" கூட்டணிக்கு இப்போது பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரு மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியா கூட்டணி: அதாவது மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் முறையே திரிணாமுல் காங்கிரஸ் & காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று சிபிஎம் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடம் இருந்தும் தள்ளியே இருக்க சிபிஎம் முடிவு செய்துள்ளது. இது பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக ஒன்று கூடியிருக்கும் "இந்தியா" கூட்டணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற சிபிஎம் கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்த முடிவை எடுத்தாலும் கூட வரும் காலத்தில் கூட்டணிக்கான வாய்ப்புகள் முற்றிலுமாக இல்லை என்று கூற முடியாது என்று முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் பொலிட்பீரோ உறுப்பினருமான நிலோத்பால் பாசு தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் கூட்டணியான "இந்தியா" கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே கருத்துவேறுபாடு இருப்பது உண்மை தான் என்றும் அவர் தெரிவித்தார்.
என்ன முடிவு: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பெங்களூரில் நடந்த "இந்திய" கூட்டத்திற்கு முன்பே சீதாராம் யெச்சூரி இது குறித்துத் தெளிவாகக் கூறிவிட்டார். மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் ஆகிய இரு கட்சிகளுக்கு எதிராகவும், கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் போட்டி இருக்கும்.. தேர்தல் கூட்டணி என்பதை தேசியளவில் அமைக்க முடியாது. அது மாநிலம் வாரியாகவே இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த வாரம் நடந்த இந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் சிபிஎம் கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் தான் திரிணாமுல் கட்சிக்கு எதிராக அரசியல் செய்து வருகிறது. அப்படியிருக்கும் போது அவர்களுடன் ஒரு மேடையில் இருப்பது நன்றாக இருக்காது என்றே மம்தாவும் கருதுவதாகவே கூறப்பட்டது. இந்த நேரத்தில் தான் சிபிஎம் தரப்பில் இருந்தும் இப்படியொரு தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்து என்ன: அதேநேரம் கூட்டத்திற்குப் பிறகு பொலிட் பீரோ வெளியிட்ட அறிக்கையில் நிலோத்பால் பாசு கூறிய எந்தவொரு கருத்துகளும் இடம்பெறவில்லை. நமது நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மை, அரசியலமைப்பு மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்த இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்து விரிவாக்கம் செய்ய பொலிட் பீரோ முடிவு செய்துள்ளது என்று மட்டும் அதில் கூறப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கினாலும் கூட இப்போது எழுந்திருக்கும் இந்த திரிணாமுல்- சிபிஎம் என்பது அங்குள்ள கூட்டணி முரண்களில் ஒன்றுதான்.. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையேயும் கூட கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications