Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமரே போருக்கு ரெடியா? சீனாவுக்கு பதிலடி கொடுப்பது எப்படி? அட்டாக்குடன் ‛ஐடியா’ வழங்கிய சு.சாமி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்லையில் சீனா வாலாட்டி வரும் நிலையில் பிரதமர் மோடியை பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையி்ல தான் சீனாவுக்கு பதிலடி கொடுப்பது எப்படி? என்பது பற்றி சுப்பிரமணியசாமி ஐடியா கொடுத்துள்ளார்.

இந்தியா -சீனா இடையே எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. அருணாச்சலபிரதேச மாநிலம் தவாங் செக்டார் பகுதியில் இந்தியா-சீனா நாடுகள் இடையேயான யங்ட்சி எல்லை உள்ளது.

இந்த பகுதியில் இருநாடுகளின் வீரர்களும் ரோந்து செல்வது வழக்கமான ஒன்றாகும். . தவாங் செக்டார் எல்லைப்பகுதியில் நம்நாடும், சீனாவும் எல்லைகளை வெவ்வேறு பகுதிகளாக வரையறுத்துள்ளன.

எல்லையில் மோதல்

எல்லையில் மோதல்


இந்நிலையில் தான் கடந்த 9 ம் தேதி தவாங் செக்டார் பகுதியில் இருநாட்டு வீரர்களும் தங்களது எல்லையில் ரோந்து சென்றனர். அப்போது சீனா வீரர்கள் அத்துமீறி இந்தியா எல்லைக்குள் நுழைய வந்தனர். எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மீறி 200 சீன வீரர்கள் கையில் ஆயுதங்கள், கட்டைகளுடன் இந்தியாவுக்குள் அத்துமீற முயன்றனர். இதையடுத்து இந்திய வீரர்கள் 50 பேர் அவர்களை எதிர்த்து தாக்கி விரட்டியடித்தனர். இதில் இருநாட்டு வீரர்களும் காயமடைந்துள்ளனர்.

எல்லையில் மீண்டும் அமைதி

எல்லையில் மீண்டும் அமைதி

இந்தியாவில் சமீபகாலமாக எல்லை மோதல் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளன. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நிலையில் நேற்று ராணுவ பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அப்போது, ‛‛கடந்த 9 ம் தேதி தவாங் செக்டார் பகுதியில் சீன வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்ற முயற்சி நம் வீரர்களால் முறியடிக்கப்பட்டது. இந்த மோதலில் நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. படுகாயமும் அடையவில்லை. தற்போது இருநாடுகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து எல்லையில் அமைதி நிலவுகிறது'' என்றார்.

சுப்பிரமணியசாமி விமர்சனம்

சுப்பிரமணியசாமி விமர்சனம்

இருப்பினும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். எல்லை பிரச்சனை பற்றி விவாதத்தை நடத்த வேண்டும் எனக்கூறி இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் சோனியா காந்தி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் வழக்கம்போல் இந்தியா-சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை, பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியின் பலவீனத்தை கணித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் அட்டாக் செய்வதாக அவர் நேற்று முன்தினம் விமர்சனம் செய்திருந்தார்.

மீண்டும் சுப்பிரமணியன் சாமி

மீண்டும் சுப்பிரமணியன் சாமி

இந்நிலையில் எல்லை விஷயத்தில் இந்தியாவுடன் சண்டையிட்டு வரும் சீனா தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கருத்துகள் தெரிவித்துள்ளார். அதாவது அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கிராமங்கள் உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநில பாஜகவினர் இன்று போராட்டம் நடத்தினர். இதுதொடர்பான படங்களை அருணாச்சல பிரதேச மாநில பாஜக சார்பில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

 தூங்கும் நபர் யார்?

தூங்கும் நபர் யார்?

இந்த பதிவை பார்த்த சுப்பிரமணியன் சாமி பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி ‛‛இந்தியாவிற்குள் சீனா ஒரு கிராமத்தை உருவாக்கி உள்ளது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. அப்படியென்றால் தூங்குவது அல்லது சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் கைக்குலுக்கி சுமூக உறவில் இருப்பது யார்?'' என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பிரதமர் மோடி தூங்குவதாவும், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அவர் கைக்குலுக்கி நட்புறவில் இருப்பதாகவும் மறைமுகமாக சுப்பிரமணியசாமி விமர்சனம் செய்துள்ளார்.

நரம்பு உணர்ச்சி இல்லையே

நரம்பு உணர்ச்சி இல்லையே

மேலும், இன்னொரு ட்விட்டர் பதிவில், ‛‛சீனாவின் ஆக்கிரமிப்பை பார்த்தால் இந்தியா உடன் போர் செய்யும் நாடு என சீனாவை ஏன் இன்னும் அறிவிக்கவில்லை? என்ற கேள்வி எழுகிறது. மேலும் தொடர்ந்து நாம் சீனாவுக்கு பதில் தான் கொடுத்து வருகிறோம். இதுதவிர சீனாவுக்கு நாம் பெரிய அளவில் பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கான திறன் நம்மிடம் உள்ளது. ஆனால் அதற்கான நரம்புகளின் உணர்ச்சி தான் தான் இல்லை'' என கூறியுள்ளார்.

 சீனாவுடன் போர் நோக்கம்?

சீனாவுடன் போர் நோக்கம்?

மற்றொரு பதிவில், ‛‛இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் நான் பதவியில் இருந்தால் மட்டுமே வியூகம் எனும் உத்தியை பரிந்துரைக்க முடியும். போருக்கான குறிக்கோள், நோக்கம் இருந்தால் இஸ்ரேல் ராணுவத்துடனும், அமெரிக்காவின் ஆயுத உதவிகளுடன் சீனாவுடன் போருக்கு செல்ல பரிந்துரைப்பேன். அதோடு திபெத்தையும், தைவானையும் சுதந்திர நாடுகளாக இந்தியா அங்கீகரிக்கும் செயலை செய்து சீனாவை எச்சரிப்பேன்'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+