Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்யாவில் நுழை தடை.. திடீரென 2 நாள் பயணமாக இந்தியா வரும் போரிஸ் ஜான்சன்... பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்யாவில் நுழைய தடை விதிக்கப்பட்ட நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இந்தியா, பிரிட்டன் இடையேயான பாதுகாப்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்தியா வெளிநாடுகளுடனான வர்த்தம் தொடர்பையும், பாதுகாப்பு துறைக்கான முதலீடுகளையும் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.

அதேபோல் இந்தியா, பிரிட்டன் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மேம்படுத்த முடிவு செய்துள்ளது. இதே நிலைப்பாட்டில் தான் பிரிட்டனும் உள்ளது.

நரேந்திர மோடியுடன் சந்திப்பு

நரேந்திர மோடியுடன் சந்திப்பு

இதனால் தான் பிரிட்டனர் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். ஏப்ரல் 21, 22ம் தேதிகளில் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் இருப்பார். ஏப்ரல் 21ல் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு போரிஸ் ஜான்சன் செல்கிறார். அதன்பிறகு ஏப்ரல் 22ல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது இருநாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதம் சார்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது

போரிஸ் ஜான்சன் நம்பிக்கை

போரிஸ் ஜான்சன் நம்பிக்கை

இந்த சந்திப்பு குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ‛‛ இந்தியாவின் சுற்றுப்பயணம் எங்கள் இருநாட்டு மக்களுக்கும் உண்மையில் முக்கியமான நிகழ்வாக அமையும், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் பலன் கிடைக்கும்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது முதல் ஆசிய பசிபிக் நாடுகளுடனான வர்த்தகம், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உறவுகளை பிரிட்டன் அதிகரிக்க முயற்சித்து வருகிறது.

வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு

வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு

இந்த பயணத்தின்போது பிரிட்டன் மற்றும் இந்தியா இடையே சில வர்த்தகங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மேலும் அறிவியல், சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான துறையிலான முதலீடுகள் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து போரிஸ் ஜான்சன் அலுவலம், ‛‛இருதரப்பு வர்த்தகத்தை 2035 ஆம் ஆண்டிற்குள்28 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அதிகரிக்க இது உதவலாம்'' என கூறியுள்ளது.

 உக்ரைன் போர் விவகாரம்

உக்ரைன் போர் விவகாரம்

முன்னதாக போரிஸ் ஜான்சன், ‛‛சதிகார அரசிடம் இருந்து நாட்டின் அமைதி, வளங்களுக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளோம். இதனால் ஜனநாயக நாடுகள் உலகளவில் நண்பர்களாக ஒன்றிணைவது முக்கியமானதாகும்'' என கூறியிருந்தார். இது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை மனதில் வைத்து இவ்வாறு தெரிவித்து இருந்தார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதற்கு பிரிட்டன், அமெரிக்க நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் உக்ரைனுக்கு ஆயுதம், பணஉதவி செய்து வருகின்றன.

Recommended Video

    Russia அனுப்பும் S400 2nd Batch | Sri Lanka, Pakistan அவல நிலை | Oneindia Tamil
    தடைக்கு மத்தியில் சந்திப்பு

    தடைக்கு மத்தியில் சந்திப்பு

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சில நாட்களுக்கு முன்பு நேரிடையாக உக்ரைன் சென்று அந்நாட்டு அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் தான் ரஷ்யாவில் நுழைய போரிஸ் ஜான்சன், அவரது அமைச்சர்கள் உள்பட 13 பேருக்கு நேற்று ரஷ்யா தடை விதித்தது. இந்நிலையில் தான் போரிஸ் ஜான்சன் வருகை தர உள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் இந்தியா நடுநிலைமை வகித்து வரும் நிலையில் போரிஸ் ஜான்சனில் வருகையும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+