உலக நாடுகளில் பகீர்.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு திடீரென கிடுகிடு உயர்வு- இந்தியா 3-வது இடம்
டெல்லி: உலக நாடுகளில் கொரோனா ஒருநாள் பாதிப்பு திடீரென கிடுகிடுவென உயர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஒருநாள் பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் இருந்து வருகிறது.
உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 74,45,945 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,18,137 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 37,25,628 ஆகவும் உள்ளது. பெரும்பாலான உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருந்தது.
பிரேசிலில் மட்டும் ஒரே நாளில் 33,100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் 20,674, இந்தியாவில் 12,375 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. கொரோனா பாதிப்பில் ரஷ்யா 4-வது இடத்தில் இருந்து வருகிறது. ரஷ்யாவில் நேற்று மட்டும் 8,404 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
சிலியில் 5,737, பெருவில் 5,087, பாகிஸ்தானில் 5,385 பேருக்கு கொரோனா உறுதியானது. செளதி அரேபியாவில் 3,717 பேருக்கும் வங்கதேசத்தில் 3,190 பேருக்கும் தென்னாப்பிரிக்காவில் 2430 பேருக்கும் ஈரானில் 2011 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
கொரோனா மரணங்களில் நேற்று மட்டும் பிரேசிலில் 1300 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் 982, இந்தியாவில் 388, இங்கிலாந்தில் 245, இத்தாலியில் 216 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் மிக அதிகமாக 596 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications