"ஒரு குற்றச்சாட்டை நிரூபியுங்கள்.. நானே தூக்கு போட்டுக்கொள்கிறேன்".. பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சவால்
டெல்லி: "என் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நானே தூக்கிட்டுக் கொள்கிறேன். உங்களிடம் (மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால் , அதை நீதிமன்றத்தில் காட்டுஙகள். நீதிமன்றம் அளிக்கும் எந்த தண்டனையையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்" என பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் கூறியுள்ளார்.
பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில் பன்னிரெண்டு ஆண்டுகளாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருப்பவரும், 6 முறை நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக ஒரு மாதத்திற்கு முன்பு காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தது. ஒரு டீன்ஏன் மல்யுத்த வீராங்கனை கூறியபாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டும் இதில் அடங்கும். அதாவது பிரிஜ் பூஷன் சிங் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தான் தான் குற்றவாளி இல்லை என்று நிரூபிக்க வேண்டும். மேலும் பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுமே இந்தியாவில் மிகவும் தீவிரமான தண்டனை தரக்கூடிய குற்றச்சாட்டுகளாகும். இதுவரை பிரிஜ் பூஷண் சிங் கைது செய்யப்படாததை கண்டித்து மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து டெல்லியில் போராடி வருகிறார்கள்
ஒரு மாதம் ஆகியும் இதுவரை பிரிஜ்பூஷன் சரண் சிங் கைது செய்யப்படவில்லை. அதேநேரம் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யக் கோரி போராடிய மல்யுத்த வீரர்களை போலீஸார் ஞாயிறன்று போராட்டக்களத்தில் இருந்து வலுக்கட்டாயமாக காவலில் எடுத்தனர். அப்போது பிரிஜ் பூஷன், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தார்.
புகார்தாரர்களின் அடையாளத்தை மறைக்கவும் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆர், பகிரங்கப்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. 354, 354A, 354D தவிர, போக்ஸோ சட்டத்தின் பிரிவு (10) 'தீவிரமான பாலியல் துன்புறுத்தல்' குற்றச்சாட்டும் பிரிஜ் பூஷன் சிங் மீது பதியப்பட்டுள்ளதாக பிரபல ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனிடையே போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை, கூட்டு பாலியல் வன்கொடுமை போன்ற மிகக் கடுமையான குற்றங்களில் காவல்துறை அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். ஆனால் 'தீவிர பாலியல் துன்புறுத்தல்' அந்த வகையில் வராது என்றும்
இப்பிரிவில் குறைந்தபட்சம் ஐந்து மற்றும் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு எஃப்ஐஆர் பதிவு செய்த பிறகும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீனும் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.

பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது அத்தனை எளிதாக எப்ஐஆர் பதிவாகவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபிறகே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியும் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படாததது மல்யுத்த வீராங்கனைகளுக்கு விரக்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஒலிம்பிக் பதக்கங்கள் உட்பட தாங்கள் வென்ற பிற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக, மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கூட்டாக நேற்று அறிக்கை வெளியிட்டு, அதற்குத் தயாராக கங்கை கரைக்கும் வந்தனர்.
பின்னர் விவசாய சங்கத்தினர் தலையிட்டு சமாதானப்படுத்தினர், அவர்கள் பதக்கங்களை ஆற்றில் வீசாமல் திரும்பினர். இந்தியா முழுவதும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் கவனம் பெறும் நிலையில், உலக மல்யுத்த கூட்டமைப்பு, மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தைக் கவனித்து வருகிறோம். குற்றம்சாட்டப்பட்டவர் மீதான விசாரணையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாததே இத்தகைய பிரச்னைக்கு முக்கிய காரணம். இது தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகளுடன் ஆலோசனை நடத்துவோம்' என்று அறிவித்தது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய பிரிஜ் பூஷன் கலந்து கொண்டு பேசினார். "என் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கூட நான் தூக்கு போட்டுக்கொள்கிறேன். அவர்களிடம் ஆதாரமிருந்தால் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும். அதன்பின்னர் நீதிமன்றம் தரும் எத்தகைய தண்டனையாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயார்" இவ்வாறு பிரிஜ் பூஷன் ஆவேசமாக பேசினார்.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications