அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணையதள வசதி! பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளிலும் பிராட்பேண்ட் மூலம் இணையதள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய தொடங்கினார்.
மதியம் 12.15 மணி வரை நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். இந்த பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறை முதல் கல்லூரி வரை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‛‛அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளிலும் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்படும். பாரத்நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். நாட்டில் உள்ள 23 ஐஐடிகளில் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 65 ஆயிரம் மாணவர்கள் வரை கூடுதலாக சேர்ந்துள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கை 1.35 லட்சமாக உள்ளது.
மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1.1 லட்சம் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது 130 சதவீதம் அதிகமாகும்.
மேலும் மருத்துவக்கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் என்ற அளவில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்படும். இதற்கு முன்னோட்டமாக வரும் ஆண்டில் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைகளில் 10 ஆயிரம் கூடுதல் இடங்கள் சேர்க்கப்படும்.'' என்றார்.












Click it and Unblock the Notifications