பிக்சட் டெபாசிட் வட்டிக்கு வரியில் வருகிறது மேஜர் மாற்றம்? பட்ஜெட்டில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வெளியாக இருக்கும் அறிவிப்புகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிகரித்துள்ளது. வருமான வரி விதிமுறையில் மாற்றம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படும் நிலையில், வங்கிகளில் பிக்சட் டெபாசிட்களில் கிடைக்கும் வட்டிக்கு பிளாட் வரியை விதிக்க வேண்டும் என்ற பரிந்துரையை எஸ்.பி.ஐ முன்வைத்துள்ளது.

மத்திய பட்ஜெட்டை வரும் 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இந்த 8-வது பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. குறிப்பாக வருமான வரி தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த வருடம் பட்ஜெட்டில் வருமான வரி மாற்றப்படவில்லை.

budget 2025 nirmala sitharaman delhi

இந்த வருடம் பட்ஜெட்டில் வருமான வரியில் பழைய முறையை நீக்குவதற்கான நடவடிக்கை, முதல் தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றமும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே பட்ஜெட்டில் வங்கிகளில் குறிப்பிட்ட காலத்திற்கு என போடப்படும் டெபாசிட்களில் கிடைக்கும் வட்டித்தொகைக்கு விதிக்கப்படும் வரியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று எஸ்.பி.ஐ வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ, இது தொடர்பாக அரசுக்கு முக்கிய பரிந்துரை வைத்துள்ளது. அதில், பிக்சட் டெபாசிட் எனப்படும் நிரந்தர வைப்புத்தொகை மூலம் கிடைக்கும் லாபத்திற்கு ஸ்லாப் அடிப்படையிலான வரி விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 15 சதவிகிதம் அளவுக்கு வரி விதிக்க வேண்டும் என எஸ்பிஐயின் இந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, அனைத்து வகையான பிக்சட் டெபாசிட்களில் இருந்து பெறப்படும் வட்டி லாபத்திற்கு 15 சதவீதம் பிளாட் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வங்கி பணப்புழக்கத்தை நிலைப்படுத்தும் நோக்கத்தில் இந்த முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளதாம். அதேவேளையில், இந்த பரிந்துரையை அமல்படுத்தினால் அரசுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும்.

ஏனெனில் தற்போது வங்கிகளில் பிக்சட் டெபாசிட்களுக்கு ஏற்றபடி 5- 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இவற்றிற்கு மாற்றாக பிளாட் வரியாக 15 சதவீதம் விதிக்க எஸ்பிஐயின் பட்ஜெட்டுக்கு முந்தைய அறிக்கையான 'யூனியன் பட்ஜெட் 2025-26 அறிமுகம்' என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சேமிப்பு கணக்கில் இருந்து பெறும் வட்டிக்கான வரி விலக்கு வரம்பையும் உயர்த்த எஸ்பிஐ பரிந்துரையை வைத்து இருக்கிறது. தற்போது, 10 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரி எதுவும் இல்லை. இதை 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+