தமிழகம் டூ மேற்கு வங்கம்! தேர்தல் மாநிலங்களுக்கு பட்ஜெட்டிலிருந்த அறிவிப்புகள் என்ன! முழு ரிப்போர்ட்
டெல்லி: மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். விரைவில் நாட்டில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த பட்ஜெட்டில் தேர்தல் சார்ந்தும் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. தேர்தல் மாநிலங்களுக்கு இந்த பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் இருந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக இன்றைய தினம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சரியாகக் காலை 11 மணியளவில் தனது பட்ஜெட் உரையை ஆரம்பித்த நிர்மலா சீதாராமன் 11.30 மணிக்கு பட்ஜெட் உரையை முடித்துக் கொண்டார். இதில் தேர்தல் மாநிலங்களில் சில குறிப்பிட்ட அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக முனைப்புடன் உள்ளது. பட்ஜெட்டிலும் கூட மேற்கு வங்கத்திற்குப் பெரியளவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. துர்காப்பூரில் இணைக்கப்படும் வகையில் 'கிழக்குக் கடற்கரை தொழில் பெருவழித் திட்டத்தை' மம்தா முன்மொழிந்தார். மேலும், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஐந்து 'பூர்வோதயா' மாநிலங்களில் ஐந்து சுற்றுலாத் தலங்களும் உருவாக்கப்படும் என அவர் அறிவித்தார்.
குஜராத்தில் உள்ள சூரத்தையும், வங்கத்தில் உள்ள டான்குனியையும் இணைக்கும் பிரத்தியேகச் சரக்குப் போக்குவரத்து காரிடார் திட்டத்தையும் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்தார். இந்தப் புதிய வழித்தடம் கிழக்கு-மேற்கு மாநிலங்களுக்கு இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, சரக்கு போக்குவரத்திற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்!
ரயில்வே துறையில் மொத்தம் ஏழு அதிவேக ரயில்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் ஒன்று மட்டும் மேற்கு வங்கத்திற்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன்படி உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசிக்கும் மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரிக்கும் இடையே அதிவேக ரயில் சேவை அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு, கேரளா
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கும் கூட ஓரளவுக்கு நல்ல அறிவிப்புகள் இருந்தது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் ரேர் எர்த் மெடல் காரிடார் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அவர், "நவம்பர் 2025இல் தொடங்கப்பட்ட ரேர் எர்த் மேக்னட் திட்டம் தற்போது கனிம வளம் நிறைந்த ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. இங்கு பகுதிகளில் ரேர் எர்த் காரிடார் உருவாக்கும் திட்டத்தை முன்மொழிகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஹைதராபாத்-சென்னை, சென்னை-பெங்களூர் ஆகிய இரு அதிவேக ரயில் காரிடார்களும் திட்டமிடப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசத்துடன் பகிரப்படும் பழவேற்காடு ஏரிக்கரையில் பறவைகள் கண்காணிப்புப் பாதைகளும், தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம் கலாச்சாரத் தலமாகவும் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொதிகை மலை, உலகத் தரம் வாய்ந்த மலையேற்றம் மற்றும் நடைப்பயண அனுபவங்களை வழங்க ஒரு சிறப்பு இடமாக மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
தேங்காய்
இந்தியாவில் அதிகத் தேங்காய் உற்பத்தி செய்யும் மாநிலங்களான தமிழ்நாடும் கேரளாவும் உள்ள நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள தேங்காய் மேம்பாட்டுத் திட்டத்தால் இரு மாநிலங்களும் பெரிதும் பயன்பெறும். தேங்காய் உற்பத்தித் திறனை மேலும் மேம்படுத்தவும் உற்பத்தியை அதிகரிக்கவும், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜகவால் கால்பதிக்க முடியவில்லை. இந்தாண்டு எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் பாஜக போராடி வருகிறது. அதை மனதில் வைத்துக் கொண்டே இந்த அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அசாம்
இப்போது பாஜக ஆளும் அசாமிலும் தேர்தல் நடக்கிறது. அங்கும் ஒரு சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுடன் இணைந்து பௌத்தச் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மனநலப் பராமரிப்பை மேம்படுத்த, அசாமின் தேஜ்பூரில் உள்ள தேசிய மனநல நிறுவனம் மண்டல உச்ச நிறுவனமாகத் தரம் உயர்த்தப்படும்.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications