பயோ பார்மா வளர்ச்சி.. ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.. மத்திய பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா சீதாராமன்!
டெல்லி: உலக அளவிலான உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ள நிர்மலா சீதாராமன், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியை பெருக்கும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. அதேபோல் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட்டாகவும் இது அமைந்திருக்கிறது.

இதனையடுத்து 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அதில் நிர்மலா சீதாராமன், புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் 350 சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு, உற்பத்தியை பெருக்கும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாகவும் மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதேபோல் பயோ ஃபார்மா எனப்படும் உலக அளவிலான உயிரி மருத்துவத் திட்டத்தை ஊக்குவிக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications