கேஸ் சிலிண்டர் இருக்குல்ல? ரேஷன் கார்டே தேவையில்லை.. இலவச சமையல் சிலிண்டரை ஆன்லைனிலேயே ஈஸியா பெறலாம்
டெல்லி: மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச கேஸ் சிலிண்டரை எப்படி விண்ணப்பித்து, பெற வேண்டும் தெரியுமா?
"பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியால் உத்தரபிரதேசத்தின் பல்லியாவில் மே 1, 2016 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

யோஜனா: நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும்.
பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது.. இது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் முதல் சமூக நலத் திட்டமாகும்.
ஆவணங்கள்: முன்பெல்லாம் அட்ரஸ் இருந்தால்தான், புதிதாக எல்பிஜி சிலிண்டரை வாங்க முடியும் என்ற விதி இருந்தது.. ஆனால், இப்போது அப்படி இல்லை..
அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசிஎல்), புதிய எல்பிஜி இணைப்பிற்கு முகவரி தேவையில்லை என்று அறிவித்துள்ளது. அதனால், வாடிக்கையாளர்கள் எல்பிஜி சிலிண்டரை இண்டேன் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் அல்லது தங்கள் பகுதிக்கு அருகில் சென்று வாங்கலாம்.
இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை, சிலிண்டருக்கான பணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது. ஒருவேளை நீங்கள் வேறு ஒரு இடத்திற்கு மாற்றலாகி சென்றால், அல்லது சிலிண்டர் தேவையில்லை என்ற நினைத்தால், சிலிண்டரை விற்பனை நிலையத்திலேயே திருப்பி தரலாம். 5 வருடங்களில் திருப்பித் தந்தால், சிலிண்டரின் விலையில் 50% திருப்பி தரப்படும்.. இதுவே, 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி தந்தால் 100 ரூபாய் திருப்பி தரப்படும்..
எப்படி விண்ணப்பிப்பது:
* https://www.pmuy.gov.in/index.aspx இணையதளத்துக்கு செல்லவும்.
* அதில் Indane, Bharatgas, Hindustan Petroleum ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சிலிண்டர் சேவையை தேர்வு செய்யவும்.
* எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.
* விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்குவதற்கான பணி தொடங்கும்
தகுதிகள்: பெண்களே இந்த திட்டத்தின் பயனாளிகள் என்பதால் இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அவரும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இதற்கு முன்பு எல்பிஜி கணக்கு ஏதும் இருக்க கூடாது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான நபர்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.
விண்ணப்பதாரரின் பெயர் SECC-2011 பட்டியலில் இருக்க வேண்டும் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் BPL தரவுத்தளத்தில் வழங்கப்பட்ட தகவலுடன் பொருந்த வேண்டும். விண்ணப்பதாரர் அரசாங்கத்தால் வழங்கப்படும் வேறு எந்த திட்டத்திலும் பதிவு செய்யக்கூடாது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications