எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை இனி வாபஸ் பெற முடியாது.. உச்ச நீதிமன்றம் அதிரடி நிபந்தனை
டெல்லி : எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை அந்தந்த மாநில ஹைகோர்ட் அனுமதி இல்லாமல் வாபஸ் பெற முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி செக் வைத்துள்ளது.
எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறித்தும், நீதிமன்றங்கள் மூலம் விரைவாக தீர்க்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதி வினீத் சரண் மற்றும் நீதிபதி சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த அமர்வு பிறப்பித்த உத்தரவில், முதல் பிரச்சனை, மாநில அரசுகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 321 -ன் கீழ் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி எம்பி எம்எல்ஏக்ககள் மீதான வழக்குகளை பற்றியது தான். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் அனுமதி இல்லாமல் அரசு அமைப்புகள் வாபஸ் பெற முடியாது என்று அதிரடியாக நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் சிறப்பு நீதிமன்றங்களில் எம்பி/எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் தங்கள் தற்போதைய பதவியில் இருக்கும் வரை தொடர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேவைப்பட்டால் நீதிபதிகளின் இடமாற்றத்திற்கு எதிராக இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி கோரிக்கை வைக்க உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல்களுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு சுதந்திரம் வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications