இல்லவே இல்லைனு மறுத்த ஆதவ்! விஜய் கேரவன் வீடியோவை காட்டிய சிபிஐ! டெல்லி குளிரிலும் வியர்த்தே போச்சு
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை அடுத்து டெல்லியில் சிபிஐ அலுவலகத்தில் கடந்த 3 தினங்களாக தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் ஆதவ் அர்ஜுனா ஆடி போகும் அளவுக்கு சிபிஐ கிடுக்கிப்பிடி கேள்விகளை ஆதாரத்துடன் கேட்டதால் பரபரப்பு எழுந்ததாக சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய் பங்கேற்ற கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

அன்று நாமக்கல்லிலும் பிறகு கரூரிலும் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. நாமக்கல் நிகழ்ச்சி தாமதமானதால், கரூருக்கு மதியம் 12 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட விஜய், இரவு 7 மணிக்குத்தான் வந்தார். மக்கள் காலை 12 மணி முதல் வெயிலிலும், உணவோ நீரோ இன்றி காத்திருந்து மயங்கியதால் நெரிசலில் மிதிக்கப்பட்டு மூச்சுத்திணறி இறந்ததாக விசாரணையில் தெரியவந்தது. விஜய் வருவதற்கு முன் வெளியேற முயன்றவர்களை தவெகவினர் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்விசாரணைக்காக, தவெகவின் புஸ்ஸி ஆனந்த், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், ஆதவ் ஆர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பின் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம், "சிபிஐ சம்மன் அனுப்பியதால் ஆஜராகி விளக்கம் அளித்தோம். கரூர் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் உலகிற்கே தெரியும். தேவையான ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளோம்," என்றார். கேள்விகள் குறித்து ஊடகங்களிடம் கூற மறுத்த அவர், இன்றும் இரண்டாம் நாளாக விசாரணை தொடர்வதாகவும் தெரிவித்தார்.
இரண்டாம் நாளான டிசம்பர் 30ஆம் தேதி விசாரணையின்போது, உயிரிழப்புகளுக்கு திமுக அரசுதான் காரணம் என ஆதவ், ஆனந்த், நிர்மல், மதியழகன் தரப்பினர் சிபிஐயிடம் தெரிவித்தனர். கூட்டம் அதிகமானபோது தடுக்காதது, காவல்துறை தலைவர்களின் வாகனங்களை வழிநடத்தியது போன்ற 'சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளே' காரணம் என்றனர்.
விஜய் 12 மணிக்கு வருவார் என நாங்கள் சொல்லவில்லை, 12 மணி முதல் கூட்டம் வரும் என்றே தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இக்குற்றச்சாட்டுகளை கரூர் மாவட்ட நிர்வாகம் மறுத்ததுடன், கூட்ட நெரிசல் குறித்து வாக்கி டாக்கி மூலம் தவெகவினருக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் காவல்துறை விளக்கமளித்தது.
இந்த நிலையில் தவெக நிர்வாகிகளிடம் நேற்றைய தினமும் சிபிஐ விசாரணை நடந்தது. அப்போது ஆதவ் அர்ஜுனாவிடம், சிபிஐ அதிகாரிகள், "உங்களை போலீஸார் சீக்கிரமாக வரச்சொன்னார்களே, பிறகு ஏன் ஒரே இடத்தில் வண்டியை நீண்ட நேரமாக நிறுத்திகிட்டு இருந்தீங்கள்" என கேட்டனராம்.
அதற்கு ஆதவ் அர்ஜுனாவோ " எங்களிடம் போலீஸார் கூட்டம் நெரிசல் இருப்பது குறித்தெல்லாம் எந்த தகவலையும் சொல்லலை" என பதிலளித்தாராம். உடனே சிபிஐ அதிகாரிகள், விஜய்யோட பிரச்சார பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போட்டு காண்பித்தார்கள்.
அதில், ஆதவ் அர்ஜுனாவுடன் காவல் துறை அதிகாரிகள் ஏதோ பேசிக் கொண்டிருந்தது பதிவாகியிருந்தது. அதை காட்டிய சிபிஐ, இந்த வீடியோவுல போலீஸ் கூட நீங்கள் (ஆதவ்) பேசிகிட்டு இருக்கீங்களே! போலீஸார் சீக்கிரமா விஜய்யை வாகனத்தில் இருந்து வெளியே வரச் சொல்லி இருக்காங்க.
அது போல் வாகனத்தையும் வேலுச்சாமிபுரத்திலேயே நிறுத்த சொல்லியிருக்கிறாங்க, ஆனால் நீங்கள்தான் பஸ்ஸை மக்கள் கூட்டத்துல விடுங்கன்னு சொல்லி இருக்கிறார்கள் என சிபிஐ மடக்க, ஆதவ் அர்ஜுனாவுக்கு அந்த குளிரிலும் வெலவெலத்து போய்விட்டதாம். இதுக்குத்தான் அவங்க பொருளை எடுத்து அவங்கையே போடுறதா?












Click it and Unblock the Notifications