சி.பி.ஐ. ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட்கள் அணிய தடை.. தாடி வைக்கவும் தடை.. புதிய இயக்குனர் அதிரடி உத்தரவு
டெல்லி: சி.பி.ஐ. ஊழியர்கள் . ஜீன்ஸ், டி-ஷர்ட்கள் அணியவும், தாடி வைக்கவும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. இயக்குனராக இருந்த ரிஷிகுமார் சுக்லா கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வுபெற்றார். இதனை தொடர்ந்து சி.பி.ஐ. புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இந்த நிலையில் சி.பி.ஐ.யின் அனைத்து அதிகாரிகளும், பணியாளர்களும் அலுவலகத்தில் சாதாரண ஆடை அணிய வேண்டும். ஜீன்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் போன்றவை அணிய கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின்படி சி.பி.ஐ ஆண் அதிகாரிகள், மற்ற பணியாளர்கள் சாதாரண சட்டைகள், சாதாரண பேண்ட்கள் மற்றும் சாதாரண ஷூக்கள் அணிந்து வர வேண்டும். ஜீன்ஸ், டி-ஷர்ட்கள், ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் அனியக் கூடாது. தாடி வளர்க்க கூடாது. கிளீன் ஷேவ் செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் பெண் அதிகாரிகள், ஊழியர்கள் புடவை, சுடிதார் மற்றும் சாதாரண சட்டை மற்றும் பேண்ட் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சி.பி.ஐ அலுவலகங்களில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படும். இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கிளைத் தலைவர்கள் உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் செயல்திறனை மேம்படுத்த சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சில முக்கியமான நிர்வாக மாற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications