என்னிடம் அஸ்தானா லஞ்சம் வாங்கிய ஆதாரம் உள்ளது.. சிபிஐக்கு எதிராக இன்னொரு சிபிஐ அதிகாரி வழக்கு!
சிபிஐ தற்காலிக இயக்குனர் நாகேஸ்வர் ராவ் தன்னை பணியிட மாற்றம் செய்ததை எதிர்த்து சிபிஐ அதிகாரி ஏ.கே பாஸி வழக்கு தொடுத்துள்ளார்.
டெல்லி: சிபிஐ தற்காலிக இயக்குனர் நாகேஸ்வர் ராவ் தன்னை பணியிட மாற்றம் செய்ததை எதிர்த்து சிபிஐ அதிகாரி ஏ.கே பாஸி வழக்கு தொடுத்துள்ளார்.
சிபிஐ அமைப்பில் தொடர்ந்து நிறைய சர்ச்சைகள் பிரச்சனைகள் நடந்து வருகிறது. சிபிஐ அமைப்பு சிபிஐ மீது வழக்கு தொடுப்பதும், சிபிஐ அமைப்பே சிபிஐ அலுவலகத்தில் ரெய்டு செய்வதும் சென்ற வாரங்களில் நடந்தது.

இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வழக்கில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
இதனால் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா விடுப்பில் அனுப்பப்பட்டார். சம்பந்தமே இல்லாமல் சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவும் இதனால் விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வர் ராவ் அதுவரை சிபிஐ இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
நாகேஸ்வர் ராவ் இயக்குனராக பொறுப்பேற்ற முதல் நாளே 13 சிபிஐ அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தார்.
ராகேஷ் அஸ்தானாவின் லஞ்ச வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி ஏகே பாஸியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
[இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் எரிபொருள் விநியோகம் பாதிப்பு... எப்போது சீராகும்?]
இந்த நிலையில் சிபிஐ செய்த இந்த பணியிட மாற்றத்திற்கு எதிராக சிபிஐ அதிகாரி ஏகே பாஸி வழக்கு தொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்துள்ளார்.
அதில், என்னிடம் ராகேஷ் அஸ்தானா குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது. அவர் 3.3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியது பற்றிய பத்திரங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் வெளியே கொண்டு வருவேன் என்று அஞ்சி என்னை பணியிட மாற்றம் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மா தான் பணியில் இருந்து விடுப்பில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். அதுபற்றிய விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications