டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண் அடிமைத்தனம்.. 10ஆம் வகுப்பு தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: 10ஆம் வகுப்பு தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி நீக்குவதாக சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அந்த கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் ஆங்கிலத் தேர்வில் சிறுகுறிப்பில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு விடையளிப்பது போன்று இருந்தது.

அதில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் பாலின பாடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஆண்களுக்கு கீழ் பெண்கள் அடங்கியிருக்க வேண்டும் என்ற ரீதியில் கேள்வி இருந்தது.

தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி.. விபத்தில் சாலையின் நடுவில் அமர்ந்திருந்த 3 பேர் பலி தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி.. விபத்தில் சாலையின் நடுவில் அமர்ந்திருந்த 3 பேர் பலி

பிற்போக்குத்தனம்

பிற்போக்குத்தனம்

அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பின. மத்திய அரசின் பிற்போக்குத்தனமான கருத்தை புத்தகத்தில் திணித்ததாகவே இது காட்டியதாக பலர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

பிற்போக்குத்தனம்

பிற்போக்குத்தனம்

இதை நம்ப முடியவில்லை. இதைத்தான் நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோமா? இதன் மூலம் பெண்கள் மீதான பிற்போக்குத்தனமாக கருத்துகளை பாஜக அரசு ஆமோதிக்கிறது என்பதை தெள்ள தெளிவாகிறது. இதை ஏன் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வைத்துள்ளார்கள்? என கேள்வி எழுப்பியதுடன் அந்த வினாத்தாளை பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டருக்கும் டேக் செய்திருந்தார்.

பிரச்சினை

பிரச்சினை

இதையடுத்து இன்றைய தினம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போதும் சோனியாகாந்தி சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி குறித்த பிரச்சினையை எழுப்பினார். இதனிடையே தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி சரியா தவறா என நிபுணர் குழு ஆராய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று அந்த கேள்வியை நீக்குவதாக சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது.

மதிப்பெண் வழங்குவதாக அறிவிப்பு

மதிப்பெண் வழங்குவதாக அறிவிப்பு

அந்த கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. பெண்கள், சமூக ஆர்வலர்கள், பெண் அரசியல்வாதிகள் உள்ளிட்டோரின் கண்டனத்திற்கு பிறகு சிபிஎஸ்இ இவ்வாறு அறிவித்துள்ளது.

English summary
CBSE announces that it removes the question which created controversy in 10th exam question paper.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X