தலையில் சுமையுடன் கீழே விழுந்த இஸ்லாமிய பெண்! படாரென பாய்ந்து வந்த ஹனுமான்! தீயாய் பரவும் புகைப்படம்
டெல்லி : சாலையில் தலையில் சுமையுடன் சென்ற இஸ்லாமிய பெண் சிரமப்பட்ட நிலையில், அவ்வழியாக சென்ற ஹனுமன் வேடமிட்ட நபர் அவருக்கு ஓடோடிச் சென்று உதவிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இன்றைய நவீன செல்போன் யுகத்தில் மனதிற்கு மிக நெருக்கமான இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பல நேரங்களில் நீங்கள் நிச்சயம் ஒருமுறையாவது பார்த்து ரசித்திருக்கலாம்.
பிறருக்கு உதவுவது, குழந்தைகள் சிரிப்பு போன்ற வீடியோக்களைப் பார்த்த பிறகு, இதயம் உண்மையில் சிலிர்ப்பதையும் நம்மால் உணர முடியும், அப்படி ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வயதான இஸ்லாமிய பெண்
தற்போது இந்தியா முழுவதும் பரவி வரும் அந்த வீடியோவில் இஸ்லாமிய பெண் ஒருவர் தலையில் வைத்துள்ள கூடையில் காய்கறி, பழங்கள் ஏதோ ஒன்றை சாலையில் கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. எடை அதிகமுள்ள அந்த கூடையை வயதான இஸ்லாமிய பெண் சிரமப்பட்டு தூக்கி செல்கிறார்.ஒரு கட்டத்தில் அந்த பெண் நிலைதடுமாற, அதிலிருந்த பழங்கள் அனைத்தும் சாலையில் விழுகிறது.

உதவிய ஹனுமன்
அப்போதுதான் அவ்வழியாக சைக்கிளில் சென்ற அனுமன் வேடமிட்ட ஒருவர் வந்து சைக்கிளை பக்கத்தில் நிறுத்தி வைத்து விட்டு அந்த இஸ்லாமிய பெண்ணுக்கு உதவுவதை வீடியோவில் காணலாம். இந்தக் காணொளியைப் பார்த்த பிறகு கடவுள் உண்மையில் உதவுகிறார் என்று தோன்றும். இந்த வீடியோ எங்கிருந்து, எப்போது எடுக்கப்பட்டது என்பது பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவனிஷ் சரண் ஐஏஸ்
சத்தீஷ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண், உதவும் கரங்கள் என்ற கேப்ஷனுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிர்ந்துள்ள நிலையில், பலரும் அதனை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். கடந்த இரு நாட்களாக ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்த வீடியோவை ஆயிரக்கணோக்கனோர் பகிர்ந்து வரும் நிலையில், லட்சக்கணக்கானோர் அதனை லைக் செய்துள்ளனர்.

பலரும் பாராட்டு
மேலும் உபி, ஹரியானா, டெல்லி போன்ற இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், இந்த காட்சி மனிதத்தை போதிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'உண்மையில் இந்த வீடியோ இதயத்திற்கு அமைதி அளிக்கிறது.' எனவும், "பாகுபாட்டை மனிதகுலத்திலிருந்து மட்டுமே ஒழிக்க முடியும்" என பலரும் அந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications