Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு ஊழியர்களுக்கு உயருது சம்பளம்.. பிப்ரவரி 1-ம் தேதி அறிவிப்பு? மெகா ஊதிய உயர்வு.. எகிறும் ஆர்வம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.. இதற்கு என்ன காரணம் தெரியுமா?

கடந்த 2013ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், அது 2016ல் அமலுக்கு வந்தது. எப்போதுமே 10 வருடத்துக்கு ஒருமுறை ஊதியக்குழு மாற்றப்படுவது வழக்கம் என்பதால், 8வது ஊதிய குழு (8th Pay commission) எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

Central Government Employees Big Salary Hike and Chances to announce 8th Pay Commission in the Union Budget Feb 1

எப்போது அமல்? : கடந்த சில மாதங்களாகவே, 8வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது தொடர்பாக அரசு தரப்பில் விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் கசிந்தது. ஆனால், மழைக்கால கூட்டத்தொடரின்போது, 8வது ஊதியக் குழுவை உருவாக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்டது..

எனினும், இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம் என்று சொல்லப்பட்டது. இதற்கு காரணம், ஜனவரியில் அகவிலைப்படி அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில், சம்பள திருத்தம் ஏற்பட வேண்டுமானால், சம்பள கமிஷனை உருவாக்க வேண்டியது அடிப்படையான விஷயமாகும்..

எம்பி தேர்தல்: இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. கடந்த 2013 எம்பி தேர்தலுக்கு முன்பே, 7வது ஊதியக்குழு அமைக்கப்பட்டது. இப்போதும் எம்பி தேர்தல் வரப்போகிறது.. அதனால், இந்த தேர்தலை கணக்கிட்டு, முன்கூட்டியே 8வது ஊதியக்குழு அமைக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்..

இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.. இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.. எம்பி தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், ஸ்பெஷலானதாக பார்ப்படுகிறது.. அதுமட்டுமல்ல, மோடி அரசின் 2வது ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது என்பதால், அதைவிட ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. அதனால்தான், தேர்தலை கருத்தில் கொண்டு, பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெருகும் எதிர்பார்ப்பு: இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து முடிவெடுக்கலாம் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன.. குறிப்பாக, ஃபிட்மெண்ட் காரணி உயர்த்தப்படலாம் என தெரிகிறது..

நீண்ட நாட்களாக இதைத்தான் அரசு ஊழியர்களும் கோரிக்கையாக விடுத்து வருகிறார்கள்.. இப்போதைதக்கு ஃபிட்மெண்ட் காரணி 2.57 ஆகவும், அடிப்படை ஊதியம் 18000 ஆகவும் உள்ள நிலையில், 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் கேட்டு வருகின்றனர்.. எனவே, 48 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்வு குறித்து, வரப்போகும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யூகமான தகவல்கள்: எப்படியும், 7வது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணி 3.00 அல்லது 3.68 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று யூகமான தகவல்கள் வருகின்றன.. ஒருவேளை 3.00 அல்லது 3.68 சதவீதமாக உயர்த்தினால், ரூ.18000லிருந்து ரூ.21000 அல்லது ரூ.26000 சம்பளம் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக மொத்தம், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் ஃபேக்டர் ஒப்புதல் மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என்பதால், வரப்போகும் பட்ஜெட்டை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் ஊழியர்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+