டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டில் கொரோனா இறப்பு...ஒரு சதவிகிதமாக குறைக்க முயற்சி...மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறியுள்ளார்.

இதுதொடா்பான கேள்விக்கு ராஜ்ய சபாவில் பதில் அளித்து அவர் பேசுகையில், ''இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஆனால், உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. உயிரிழப்பு விகிதம் தற்போது 1.64 சதவீதமாக இருக்கிறது. இதை ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகளில் இந்தியாவை காட்டிலும் உயிரிழப்பு 11 மடங்கு அதிகமாக உள்ளது.

Central government is trying to reduce the corona death rate in India says Harsh Vardhan

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோா் விகிதம் 78-79 சதவீதமாக உள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. ஆனால், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 20 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. அதாவது, தற்போது 10 லட்சம் போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவர்கள் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

கொரோனா சிகிச்சை அளிப்பதிலிருந்து மருத்துவர் வீரபாபு திடீர் விலகல்.. சித்த மையம் என்னவாகும்? கொரோனா சிகிச்சை அளிப்பதிலிருந்து மருத்துவர் வீரபாபு திடீர் விலகல்.. சித்த மையம் என்னவாகும்?

இந்தியாவில் 135 கோடி மக்கள் உள்ளனர். இந்தியாவில், ஒரே நாளில் 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா பரிசோதனையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மக்கள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசியாக, பிசிஜியை பயன்படுத்தலாமா என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சி செய்து வருகிறது.

Central government is trying to reduce the corona death rate in India says Harsh Vardhan

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் ஒட்டு மொத்த நாடும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. கொரோனா தடுப்பில் முன்கள வீரா்களாகப் பணியாற்றும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

English summary
Central government is trying to reduce the corona death rate in India says Harsh Vardhan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X