3000 கொடுத்து Fastag வாங்கினால்.. ஒரு வருடத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் நெடுஞ்சாலையில் பயணம்?
டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்க ரூ.30,000க்கு லைஃப் டைம் இலவச பாஸ் பெறும் வசதியை விரைவில் மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கார் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சொல்லப்படுகிறது. இதேபோல 3000 ரூபாய்க்கு ஒரு வருட ஆஃபரும் தரப்போகிறார்களாம்.
இப்படி செய்வதன் மூலம் தேவையற்ற போக்குவரத்து நெரிசல்களையும், வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடி கட்டணம் குறித்த நெருக்கடிகளையும் தவிர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில் என்டிடிவி செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, சுங்கச்சாவடி கட்டணங்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும், இந்த புகார் மீது ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது என்றும், விரைவில் பயணிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், சுங்கச்சாவடி கட்டண வசூல் முறையில் மாற்றம் வரப்போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் மாதாந்திர கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. மாதம் ரூ.340 என்று இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆண்டுக்கு ரூ.4,080 வருகிறது. இந்த தொகையை செலுத்திவிட்டால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை எத்தனை முறை வேண்டும் என்றாலும் கடந்து செல்லலாம்.
ஆனால் இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், ஆதே நேரம் இதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இதற்கான தீர்வுக்கு முயன்று வந்தது. அதன்படி இனி பயணிகளின் வசதிக்காக ஆண்டு கட்டண நடைமுறை கொண்டுவரலாம் என யோசித்து வருகிறது.
ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்கச்சாவடியை கட்டணமின்றி கடந்துக்கொள்ளலாம். அதேபோல ரூ.30,000 செலுத்தினால் 15 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இலவசமாக கடந்து செல்லலாம் என்கிற ஐடியாவை நடைமுறைப்படுத்த போக்குவரத்து துறை அமைச்சகம் யோசித்து வருகிறது. இதற்கான முன் நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும், இது விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி செய்வதன் மூலம் கார் ஓனர்களுக்கு இரண்டு விஷயங்களில் பலன் கிடைக்கும். ஒன்று, முந்தைய கட்டணத்தை விட இதில் கட்டணம் குறைவு. இரண்டாவது சிக்கலற்ற பயணம் சாத்தியமாகும். பஸ், லாரி போல தினமும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு இது பெரும் நன்மையாகும். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் இந்த யோசனை குறித்து உங்கள் கருத்து என்ன?
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications