"அதிகாரமே இல்லை.. ஆளுநர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது.." தமிழக அரசு தொடர்பான வழக்கில் மத்திய அரசு வாதம்
டெல்லி: மசோதாக்கள் மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்ய செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. அப்போது மசோதாக்களில் முடிவெடுப்பது என்பது ஆளுநரின் சிறப்புரிமை என்றும் அதில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், இது அரசியலமைப்பு சீர்குலைவுக்கே வித்திடம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்திருந்தது. ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் தான் இந்தத் தீர்ப்பு வந்தது. இது மிக மிக முக்கியமான ஒரு தீர்ப்பாகவே பார்க்கப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
இதற்கிடையே மசோதாக்களில் முடிவெடுக்கும் விவகாரத்தில் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்பது குறித்து குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து 14 கேள்விகளையும் எழுப்பியிருந்தார். இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு தனது எழுப்பூர்வ வாதத்தைத் தாக்கல் செய்திருந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு ரீதியான சமநிலையைச் சீர்குலைக்கும் என்றும் நிர்வாகம், சட்டம் இயற்றும் அமைப்பு மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப் பிரிவினையை இது பாதிக்கும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்புச் சீர்குலைவு
ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது என்பது ஒரு உயர்ந்த சிறப்புரிமை என்றும் இது நீதிமன்றத்தால் மறுஆய்வு செய்ய முடியாத அதிகாரம் என்றும் மத்திய அரசின் மனுவில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும், "ஒரு ஜனநாயகத்தில் எழும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நீதித்துறை வசம் தீர்வுகள் இல்லை. ஒரு அமைப்பின் அதிகாரத்தை மற்றொரு அமைப்பு தனதாக்கிக் கொள்ள அனுமதித்தால், அரசியலமைப்புச் சீர்குலைவு ஏற்படும்.
அதிகார பகிர்வு அரசியலமைப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக இருந்தாலும், காலப்போக்கில், அவை ஒரு குறிப்பிட்ட அளவு ஒன்றிணைப்பு, சரிபார்ப்பு மற்றும் சமநிலை ஏற்பட்டது. இருப்பினும், மூன்று அமைப்புகளுக்கும் சில குறிப்பிட்ட அதிகாரங்கள் பிரத்தியேகமாகவே உள்ளன. அவற்றை மற்ற அமைப்புகள் மீற முடியாது. ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் உயர்ந்த, முழுமையான பதவிகள் இந்த பிரத்தியேக அதிகார வரம்பிற்குள் வருகின்றன. இவை அரசியல் பதவிகளாக இருந்தாலும், ஜனநாயகத்தின் பிரதிநிதித்துவங்களாகவும் உள்ளன.
ஜனநாயகம்
ஆளுநர்கள் அமைச்சரவையால் (குடியரசுத் தலைவர் வழியாக) நியமிக்கப்பட்டாலும், நேரடித் தேர்தல்கள் மட்டுமே ஜனநாயகத்தில் உள்ள ஒரே ஜனநாயக செயல்முறை அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நியமிக்கப்படும் அதிகாரப் பதவிகளும் ஜனநாயக நம்பிக்கையின் சட்டபூர்வ மையங்களாகும்" என்று மேத்தா விளக்கினார். அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு மூலம் நியமிக்கப்பட்ட ஆளுநர்களும் ஜனநாய செயல்முறையின் ஒரு அங்கம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய அரசு மேலும், "ஆளுநர்களை அந்நியர்களாகக் கருதப்படக்கூடாது. ஆளுநர்கள் மத்திய அரசின் தூதர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் பிரதிநிதிகள். அவர்கள் இந்திய அரசியலமைப்பு சகோதரத்துவத்தின் ஒரு பகுதியாக மாநிலங்களில் தேசிய நலன் மற்றும் தேசிய ஜனநாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது என்பது ஆளுநரின் ஒப்புதல் ஒரு உயர்ந்த சிறப்புரிமை. இது நீதிமன்றத்தால் மறுஆய்வு செய்ய முடியாத அதிகாரம், இது தனித்துவமானது.
அரசியலமைப்பு தன்மை
ஆளுநர் அளிக்கும் இந்த ஒப்புதலின் இந்த நடவடிக்கைக்கு ஒரு அரசியலமைப்புத் தன்மை உள்ளது. இகு நீதித்துறை நிர்வகிக்கக்கூடியது இல்லை. நீதித்துறை மறுஆய்வின் எல்லைகள் விரிவடைந்து வந்தாலும், ஒப்புதல் போன்ற சில பகுதிகள் நீதிமன்றத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டவை. இது மாநில அமைப்புகளுக்கு இடையிலான அரசியலமைப்பு சமநிலையைச் சீர்குலைக்கும்.
இது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானது. ஒரு ஜனநாயக அமைப்பில் எழும் ஒவ்வொரு குழப்பத்திற்கும் நீதித்துறை வசம் தீர்வுகள் இல்லை. எனவே அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் சில கேள்விகளை நீதித்துறை வரம்பிற்கு வெளியே வைத்தனர். உலகெங்கிலும் உள்ள நீதித்துறை நடைமுறைகளிலும் அதுதான் பின்பற்றப்படுகிறது. இதனால் நீதிமன்றம் காலக்கெடு விதிக்கும் உத்தரவைப் பிறப்பிக்க முடியாது.
அரசியலமைப்பு சீர்குலைவு
அரசியலமைப்பில் உள்ள ஒவ்வொரு அமைப்பிற்கும் சில முக்கிய செயல்பாடுகள் உள்ளன. ஒரு அமைப்பு மற்றொன்றின் முக்கிய செயல்பாடுகளில் தலையிடுவது, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கூறான அதிகாரப் பிரிவினையை மீறும். அரசியலமைப்புச் சட்டம் சில முடிவுகளை எடுக்கக் காலக்கெடுவைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. சட்டப்பிரிவு 200 அல்லது 201 ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்காததால், நீதிமன்றம் காலக்கெடு விதிக்க முடியாது.
ஒரு அமைப்பின் தோல்வி, செயலற்ற தன்மை அல்லது பிழை மற்றொரு அமைப்பை அரசியலமைப்பு வழங்காத அதிகாரங்களை எடுத்துக் கொள்ள அங்கீகரிக்காது. பொது நலன் அல்லது அதிருப்தி என்று சொல்லிக் கொண்டு, ஒரு அமைப்பு மற்றொன்றின் செயல்பாடுகளைத் தனதாக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டால், அதன் விளைவு அரசியலமைப்புச் சீர்குலைவாக இருக்கும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications