இனி மத்திய அரசே கொள்முதல் செய்யும்.. ஜூன் 21 முதல் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. மோடி
டெல்லி: கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்யும் பொறுப்பை இனி மத்திய அரசே ஏற்கும் என்றும் வரும் 21 ஆம் தேதி முதல் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா அதிகரிக்கும் நிலையில் 18 வயது முதல் 44 வயதினருக்கும் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக கொடுக்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா முன்களத்தில் நின்று போராடி வருகிறது.
100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப் பெரிய தொற்று மக்களை பாதித்துள்ளது. மேலும் 3 தடுப்பூசிகள் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளன.

மாநிலங்கள்
தடுப்பூசி கொள்கையில் மாநிலங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. நாங்களே ஏன் தடுப்பூசி தயாரிக்க கூடாது என சில மாநிலங்கள் கேள்வி எழுப்புகின்றன. தடுப்பூசி வாங்குவது எவ்வளவு கஷ்டமான பணி என்பது இப்போதுதான் மாநில அரசுகளுக்கு தெரிய வந்துள்ளது.

கோரிக்கை
மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்து வருகிறது. இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும். தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25 சதவீத பங்கையும் மத்திய அரசே ஏற்கும். மாநில அரசுகளுக்கு 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கொள்ளலாம். தடுப்பூசியின் விலையை விட ஒரு டோஸுக்கு சேவை கட்டணமாக ரூ 150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலவச தடுப்பூசி
ஜூன் மாதம் 21 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும். மாநிலங்கள் தங்களது நிதியிலிருந்து தடுப்பூசிக்கு செலவிட தேவையில்லை. தடுப்பூசி பற்றக்குறை நாடு முழுக்க விரைவில் தீர்ந்துவிடும் என தொலைக்காட்சி உரையில் மோடி பேசினார்.

மாநில அரசு
மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்பதே சுப்ரீம் கோர்ட்டின் கருத்தாகும். இதையே மாநில அரசுகளும் வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பான வழக்கில் விரைவில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு விடும் சூழல் உள்ள நிலையில் தற்போது மத்திய அரசே முன்வந்து இந்த முடிவை அறிவித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications