பாஜகவில் இணையும் சாம்பாய் சோரன்.. உறுதி செய்த ட்விட்டர்! ஆஹா நோட் பண்ணுங்க.. கவிழும் ஜார்கண்ட் அரசு?
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் அங்குள்ள ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சாம்பாய் சோரன் இப்போது பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் இருந்து ஜேஎம்எம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீக்கியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கே இப்போது ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கும் நிலையில், திடீர் அரசியல் குழப்பம் அங்கே திடீரென ஏற்பட்டுள்ளது.

கிட்டதட்ட உறுதி: அதாவது ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர் சாம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணையப் போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கேற்ப சாம்பாய் சோரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த ஜேஎம்எம் அடையாளத்தை நீக்கியுள்ளார். இதன் மூலம் அவர் பாஜகவில் இணைவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
அதாவது முன்பு அவரது பயோவில் போக்குவரத்து மற்றும் பழங்குடியினர், பட்டியலினத்தவர், எம்பிசி நல்வாழ்வுத்துறை அமைச்சர் என்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் துணைத் தலைவர் என்றும் இருந்தது. ஆனால், இப்போது அதை எல்லாம் சாம்பாய் சோரன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் இருந்து நீக்கியுள்ளார். இப்போது வெறும் ஜார்க்கண்ட் துணை முதல்வர் என்று மட்டுமே பயோவில் இருக்கிறது.
ட்விட்டர் பயோ: இதை வைத்தே அவர் ஜேஎம்எம் கட்சியில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைவது உறுதி எனப் பலரும் சொல்லி வருகிறார்கள். இன்று காலை அவர் தனது ஆதரவாளர்களுடன் டெல்லிக்குச் சென்றதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே டெல்லி விமான நிலையத்தில் சாம்பாய் சோரனிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பாஜகவில் இணைவது குறித்து நேரடியாகப் பதில் அளிக்க மறுத்த சாம்பாய் சோரன், தனிப்பட்ட வேலைகளுக்காக டெல்லி வந்துள்ளதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். இருப்பினும், தற்போது இருக்கும் அரசியல் சூழலை வைத்துப் பார்க்கும் போது அவர் பாஜகவில் இணையலாம் என்றே சொல்லப்படுகிறது. அவர் பாஜகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தால், ஜார்க்கண்ட் கூட்டணி அரசு கவிழும் அபாயமும் இருக்கிறது.
கவிழும் ஜார்கண்ட் அரசு! இரண்டாக பிளவுபடும் ஜேஎம்எம்? பாஜகவுக்கு தாவும் சாம்பாய் சோரன்- மெகா ட்விஸ்ட்
ஆட்சி கவிழும்: ஏனென்றால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், அங்கே ஆட்சியை அமைக்க 41 இடங்கள் தேவை. தற்போது ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணிக்கு இப்போது 45 இடங்கள் இருக்கிறது. சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களான 6 ஜேஎம்எம் எம்எல்ஏக்கள் பாஜவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி இணைந்தால் ஆளும் தரப்பினர் ஆதரவு 38ஆகக் குறையும். இதனால் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி கவிழும் அபாயம் இருக்கிறது.

பின்னணி என்ன: நிலமோசடி வழக்கில் கடந்த பிப். மாதம் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டு இருந்தார். அப்போது அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அப்போது இந்த சாம்பாய் சோரன் தான் முதல்வராகப் பதவியேற்றார். சுமார் 5 மாதங்கள் அவரே முதல்வராக இருந்தார். இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் முதல்வராகப் பதவியேற்றார்.
இதற்காகச் சாம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. இதனால் அவர் அதிருப்தி அடைந்ததாகவும் இதன் காரணமாகவே பாஜகவில் இணைய முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications