பிரக்ஞானந்தாவின் அக்காவுக்கு பிரதமர் மோடி தந்த கவுரவம்! மகளிர் தினத்தில் வைஷாலிக்கு அதிர்ஷ்டம்
டெல்லி: மகளிர் தினத்தன்று தனது சமூக வலைதள பக்கங்களை பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கையாள்வார்கள் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அக்காள், செஸ் வீராங்கனையான வைஷாலிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பக்கத்தை கையாண்ட வைஷாலி அதில் பதிவு செய்த போஸ்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேபோல் வேறு யாரெல்லாம் பிரதமர் மோடியின் வலைதள பக்கத்தை இன்று கையாண்டனர் என்பது பற்றிய முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை போற்றும் வகையில் இன்று ஒருநாள் மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் கையாளர்வார்கள் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று அவரது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தை தமிழக செஸ் வீராங்கனை கையாண்டார். இவர் யார் என்றால் சென்னையை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர்
பிரக்ஞானந்தாவின் அக்காள் ஆவார். 2001ம் ஆண்டில் பிறந்த இவர் FIDE கிராண்ட் ஸ்விஸ் பட்டத்தை 2023ம் ஆண்டில் வென்று பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டிக்குள் நுழைந்தார். இதற்கு முன்பு கடந்த 2012ம் ஆண்டில் 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் வைஷாலி வெற்றி பெற்றிருந்தார். அதன்பிறகு 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 2015ல் வாகை சூடினார். 2018 ம் ஆண்டில் பெண் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார்.
இந்நிலையில்தான் பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பக்கத்தை கையாண்ட வைஷாலி அதில், "வணக்கம். நான் வைஷாலி. மகளிர் தினத்தன்று பிரதமர் மோடியின் சமூக வலை தள பக்கத்தை கையாள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களில் பலருக்குத் தெரியும், நான் செஸ் விளையாடுகிறேன். மேலும் பல போட்டிகளில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவ படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்'' என்று தனது 2 போட்டோக்களுடன் பதிவிட்டுள்ளார்.
வைஷாலியை போல் மேலும் 5 பேர் இன்று பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தை கையாண்டு தங்களின் சாதனைகள் குறித்து போட்டோக்களுடன் பதிவிட்டனர். அதன்படி பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் அனந்தபூர் கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலதிபரான அனிதா தேவி, ‛ப்ரண்டையர் மார்க்கெட்' நிறுவனரும், சிஇஓவுமான அஜைதா ஷா, சமர்த்யம் இணை நிறுவனம் டாக்டர் அஞ்லி அகர்வால் உள்ளிட்டோரும் மோடியின் எக்ஸ் வலைதள பக்கத்தை கையாண்டனர்.
அதேபோல் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்தவரும், மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்ற தேர்வாகி உள்ள எலினா மிஸ்ரா, இஸ்ரோவில் 24 ஆண்டுகளாக விஞ்ஞானியாக பணியாற்றி வரும் மத்திய பிரதேச மாநிலம் சாகரை சேர்ந்த ஷில்பா சோனி ஆகியோரும் இன்று பிரதமர் மோடியின் எக்ஸ் வலைதள பக்கத்தை கையாண்டனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications