அமித்ஷா அழைப்பை ஏற்பார்களா ஸ்டாலின், மமதா?ஹரியானாவில் அக்.27,28-ல் மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 27, 28 தேதிகளில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டை கூட்டியுள்ளார். ஹரியானாவில் நடைபெறும் இம்மாநாட்டில் உள்துறை இலாகாக்கள் வைத்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்பார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு பல்வேறு துறைகளின் மாநில அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தை அடுத்தடுத்து நடத்தி வருகிறது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்களின் மாநாடு கடந்த 2 நாட்களாக ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற்றது. அதேபோல் அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்களின் 2 நாட்கள் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

உள்துறை அமைச்சர்கள் மாநாடு
இதனைத் தொடர்ந்து ஹரியானா மாநிலத்தில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு அக்டோபர் 27 மற்றும் அக்டோபர் 28 ஆகிய இருநாட்கள் நடைபெற உள்ளது. மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறை செயலாளர்கள், டிஜிபிக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின், மமதா பானர்ஜி
நாட்டின் பல மாநிலங்களில் உள்துறை இலாகா பொறுப்பை முதலமைச்சர்களே தம் வசம் வைத்திருக்கின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் உள்துறை இலாகா உள்ளது; மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மமதா பானர்ஜி வசம் உள்துறை இலாகா உள்ளது. இதனால் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்தி திணிப்பு பரிந்துரை
அதேநேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டியுள்ள இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவானது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாயமாக்கும் பரிந்துரை வழங்கியது. இதனை இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

ஸ்டாலின், மமதா பங்கேற்பார்களா?
தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவிலும் இந்தி திணிப்பு முயற்சிக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அமித்ஷா கூட்டியுள்ள உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பாஜக அல்லாத- இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications