செம குட் நியூஸ்.. கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO விரைவில் ஒப்புதல்?.. சவுமியா சுவாமிநாதன் தகவல்!
டெல்லி: கோவாக்சினின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக விளங்கி வருகிறது.
கோவாக்சின் இதுவரை 2.5 கோடிக்கும் அதிகமானோருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.உலக நாடுகளின் பல்வேறு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கிய உலக சுகாதார மையம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசிக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

கோவாக்சின் தடுப்பூசி
கோவாக்சின் தடுப்பூசி 77.8% வரை நோய்க்கு எதிராக வினை புரிவதாக தரவுகள் கூறுகின்றன. இது தவிர டெல்டா, ஆல்பா போன்ற மாறுபாடு அடைந்த வைரசுக்கு எதிராக கோவாக்சின் செயல்படும் என்றும் தரவுகள் காட்டும் நிலையில் உலக சுகாதார மையம் ஒப்புதல் வழங்காதது பல்வேறு கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் விரைவில் ஒப்புதல் வழங்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

செயல்திறன் அதிகம்
இது தொடர்பாக அவர் கூறுகையில், ' கோவாக்சினின் 3-வது கட்ட சோதனைத் தரவு மிகவும் நன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், டெல்டா மாறுபாடு வைரஸையும் கோவாக்சின் எதிர்கொண்டுள்ளது. சோதனையில் காணப்பட்ட திருப்புமுனை வகைகளில் 60 சதவீதத்தை வரிசைப்படுத்தியுள்ளன. டெல்டா மாறுபாட்டிற்கு எதிரான செயல்திறன் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும்போது ஒட்டுமொத்த செயல்திறன் அதிகமாக உள்ளது, ஆனால் அது இன்னும் மிகவும் நல்லது,

விரைவில் மதிப்பாய்வு
எனவே அனைத்து அறிகுறிகளும் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு சுயவிவரம் உலக சுகாதார வரையறைகளை பூர்த்தி செய்கின்றன, ஆனால் விவரங்கள் தகுதி மற்றும் ஒழுங்குமுறை குழுவால் கவனிக்கப்பட உள்ளன. முன் சமர்ப்பிக்கும் கூட்டம் ஜூன் 23 அன்று நடைபெற்றது, தற்போது தரவு தொகுப்பு சமர்ப்பிக்கப்பட்டு கூடியிருக்கிறது. கோவாக்சினின் பாதுகாப்பு, தரம், நல்ல உற்பத்தி நடைமுறைகள் உள்ளிட்டவை காணும் ஒரு குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும்.
Recommended Video

விரைவில் ஒப்புதல்
ஆகஸ்ட் நடுப்பகுதி முதல் கோவாக்சின் அவசரகால பயன்பாடு ஒப்புதலை பெறுமா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம். கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கும் என்று நம்புகிறோம் என்று தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார்.












Click it and Unblock the Notifications