இந்தியாவுக்கு மீண்டும் குடைச்சலை கொடுக்கும் சீனா.. ஸ்பெஷல் உரங்களை தடுத்து நிறுத்தி அடாவடி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா சீனா இடையே கடந்த பல ஆண்டுகளாகவே நல்லுறவு இருந்தது இல்லை. இந்தியாவுக்குச் சீனா பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஸ்பெஷல் உரங்களின் இறக்குமதியைச் சீனா தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா சீனா இடையிலான கடந்த பல காலமாகவே எல்லை மோதல் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளில் கல்வான் மோதல் உள்ளிட்ட காரணங்களால் எல்லை பதற்றம் அதிகரித்தது. மேலும், சீனாவின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடும் அதிகரித்தே வந்தது.

China Blocks Specialty Fertiliser Exports to India Threatening Agriculture Amid Trade Tensions

உர சப்ளையை நிறுத்திய சீனா

இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு, இந்தியாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் முதலீடு செய்யும் முன்பு அரசு ஒப்புதல் கட்டாயம் என்ற நிபந்தனையை விதித்திருந்தது. இதற்கிடையே கடந்த இரண்டு மாதங்களாகவே இந்தியாவுக்கான பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கப் பயன்படும் சிறப்பு உரங்களின் ஏற்றுமதியைச் சீனா நிறுத்தியுள்ளது. மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதி தொடரும் போதிலும் இந்தியாவுக்கு மட்டும் உரங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

80% உரங்கள்

இந்தியா தனக்குத் தேவையான சிறப்பு உரங்களில் சுமார் 80% சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. கடந்த 4, 5 ஆண்டுகளாகவே இந்தியாவிற்குச் சிறப்பு உரங்கள் வழங்குவதில் சீனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. ஆனால், இந்த முறை திடீரென இறக்குமதியை முழுமையாக நிறுத்தியுள்ளது. வெளிப்படையாகத் தடை விதிக்கவில்லை என்ற போதிலும் மறைமுக தடையைச் சீனா விதித்துள்ளது.

மறுக்கும் சீன அதிகாரிகள்

அதாவது பொதுவாகச் சீன அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி அளித்த பிறகே தொழிற்சாலைகளில் இருந்து ஏற்றுமதி நடக்கும். பல்வேறு காரணங்களைச் சொல்லி இந்தியாவிற்குச் செல்லும் உரங்களுக்கு அனுமதியைச் சீன அதிகாரிகள் கொடுப்பதில்லையாம். இதன் மூலம் உரங்கள் ஏற்றுமதிக்கு மறைமுக தடையைச் சீனா விதிக்கிறது.

ஏற்கனவே அமெரிக்காவின் வரிகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அரிய வகை உலோகங்களின் (rare earth metals) ஏற்றுமதியையும் கட்டுப்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில் தான் இந்தியாவுக்கு மறைமுகமாக உரங்கள் செல்வதையும் சீனா தடுத்து நிறுத்தியுள்ளது.

ஸ்பெஷல் உரங்கள் என்றால் என்ன?

ஸ்பெஷல் உரங்கள் என்பவை மண்ணுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்கும். சிறப்பு உரங்கள் பல்வேறு வகைப்படும். அதில் ஒன்று நீரில் கரையக்கூடிய உரங்கள் (water-soluble fertilizers).. இவை நீரில் முழுமையாகக் கரைந்துவிடும். இந்த வகை உரங்களைப் பயன்படுத்தும்போது, அது தாவரங்களுக்கு உடனடியாக தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

அடுத்து நேரடியாகத் திரவ உரங்கள் (liquid fertilizers).. இந்த ஊட்டச்சத்து நிறைந்த கரைசல்கள் தெளிப்பான் அல்லது சொட்டு நீர் பாசனம் மூலம் தாவரங்களுக்குச் செலுத்தப்படுகிறது.. கட்டுப்படுத்தப்பட்ட ரிலீஸ் உரங்கள் (Controlled release fertilizers) இவை ஈரப்பதம் மற்றும் வெப்ப நிலை அடிப்படையில் ஊட்டச்சத்துக்களை படிப்படியாக வெளியிடுகின்றன. மெதுவாகச் சத்துகளை உரங்கள் (Fortified fertilizers) என்பது இன்னொரு வகை. இவை வாரங்கள் அல்லது மாதக் கணக்கில் கூட ஊட்டச்சத்துக்களைச் சீராக வழங்கி, மண்ணில் மெதுவாகக் கலக்கின்றன.

பல வகை உரங்கள்

Micronutrient fertilizers அதாவது நுண்ணூட்டச்சத்து உரங்கள் என்று ஒரு வகை உள்ளன. இவை துத்தநாகம், போரான், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுகளைத் தாவரங்களுக்கு வழங்குகின்றன. Fortified fertilizers எனப்படும் வலுவூட்டப்பட்ட உரங்கள் இன்னொரு வகை. மண் குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கந்தகம், துத்தநாகம் அல்லது போரான் போன்ற கூடுதல் ஊட்டச்சத்துக்களுடன் இவை செறிவூட்டப்படுகின்றன.

இது போக ஒவ்வொரு மண்ணிற்கும் ஏற்றபடி தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்ட உரங்களும் உள்ளன. மேலும், நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஊட்டச்சத்துக்களைத் திறமையாகத் தாவர செல்களுக்குள் செலுத்தும் நானோ உரங்களும் உள்ளன. இப்படி பல்வேறு வகையான சிறப்பு உரங்களை நாம் சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.

இந்தியாவுக்குத் தேவை

பொதுவாக இந்தியா ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 1.5 -1.6 லட்சம் டன் சிறப்பு உரங்களை இறக்குமதி செய்கிறது. இந்த உரங்கள் பயிர் விளைச்சலை மேம்படுத்துகின்றன, மண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. மேலும் வழக்கமான உரங்களுடன் ஒப்பிடும்போது இதன் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைவு.

முட்டுக்கட்டை போடும் சீனா

இந்தியாவிடம் இதுவரை இதுபோன்ற சிறப்பு உரங்களை உற்பத்தி செய்யத் தேவையான தொழில்நுட்பம் இல்லை. இருப்பினும், பல நிறுவனங்கள் இதன் உற்பத்தி அலகுகளை அமைக்க ஆர்வமாக உள்ளன. ஆனால், அவை ஆலைகளை அமைத்து உற்பத்தியைத் தொடங்கி சில மாதங்களாவது ஆகும். அதுவரை நாம் உரங்களை இறக்குமதி செய்து தான் ஆக வேண்டும். ஆனால், அதைக் கொடுக்காமல் சீனா முட்டுக்கட்டை போடுகிறது.

இப்போது இந்தியா வேறு நாடுகளில் இருந்து இந்த ஸ்பெஷல் உரங்களை இறக்குமதி செய்யலாம். ஜோர்டான் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளை அணுகி உரங்களை இறக்குமதி செய்ய முடியும். ஆனால், சரியான நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வது சவாலான விஷயமாக இருக்கும் என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+