பாகிஸ்தான் உள்ளே.. கொத்து கொத்தாக "பிரைவேட்" படையாளிகளை இறக்கும் சீனா.. என்ன நடக்குது எல்லையில்?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டிற்கு உள்ளே சீனா கொத்து கொத்தாக படைவீரர்களை களமிறக்க தொடங்கி உள்ளது. நேரடியாக சீன ராணுவ வீரர்களை களமிறக்காமல், சீனாவின் தனியார் படைவீரர்களை களமிறக்கி வருகிறது.

1. பொதுவாக தனியார் படைவீரர்களை Mercenaries என்று அழைப்பார்கள். முன்னாள் படைவீரர்களை சிலர் வேலைக்கு அழைத்து இது போல தனியார் படை குழுக்களை உருவாக்குவார்கள். போர்கள், தாக்குதல்கள் நடக்கும் போது இது போன்ற படைகள் முக்கியமானது.

2. அரசு நேரடியாக தலையிட முடியாத சில விவகாரங்களில் அரசு சார்பாக இது போல Mercenaries களமிறக்கப்படுவார்கள்.

3. அமெரிக்காவிடம் இது போல Mercenaries அதிகம் உள்ளனர். இஸ்ரேல், சீனா, ரஷ்யாவிடம் Mercenaries அதிகம் உள்ளனர்.

4. முக்கியமாக பாகிஸ்தானிடம் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள Mercenaries அதிகம் உள்ளனர்.

5. இப்படிப்பட்ட Mercenariesகளைத்தான் சீனா இப்போது பாகிஸ்தான் எல்லையில் களமிறக்கி உள்ளது. இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால் பாகிஸ்தானின் சிந்து பகுதியில் சீனா களமிறக்கி உள்ளது.

China brings Mercenaries to Pakistan Sindh Region How it may affect India

6. கிட்டத்தட்ட 15 ஆயிரம் Mercenariesகளை சீனா களமிறக்கி உள்ளதாம். இந்தியாவின் உளவு பிரிவுகளுக்கு இது தொடர்பாக தகவல்கள் வந்துள்ளதாம்.

7. சீனாவின் பல்வேறு கட்டுமான திட்டங்களுக்காக பாகிஸ்தானில் 30 லட்சம் பேர் வரை உள்ளனர். அவர்களை பாதுகாப்பது இவர்களின் முதல் நோக்கம்.

8. இரண்டாவதாக இந்தியா சிந்து பகுதியில் தாக்கினால் அதை தடுப்பது இரண்டாவது நோக்கம்.

9. கடந்த 1 மாதத்தில் மட்டும் சிந்து பகுதியில் இந்த Mercenariesகள் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளதாம்.

10. இவர்கள் தனியார் என்றாலும் சீன அரசு செலவு செய்யாமல் இவர்கள் களமிறங்க மாட்டார்கள். அதோடு இவர்கள் நேரடி அரசு ஊழியர்கள் இல்லை என்பதால் இவர்களின் தாக்குதல்கள் கொடுமையாக இருக்கும். விதிப்படி, போர் முறைப்படி இவர்கள் செயல்பட மாட்டார்கள். ஐநாவின் விதிகளை மதிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தாக்குதல்

ஏற்கனவே பாகிஸ்தான் பொதுவாக எல்லை கடந்த தாக்குதல்களை ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை சர்வதேச எல்லையில் இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு உள்ளது.

ஜம்முவின் பராக்வால் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. போர் இல்லாத நேரத்தில் இந்திய வரலாற்றில் இப்படி பாகிஸ்தான் சர்வதேச எல்லை கோட்டை மீறி தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை.

சர்வதேச எல்லை என்பது இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் சர்வதேச நாடுகள் மூலம் ஒப்புதல் பெற்ற எல்லை ஆகும். அதாவது சில எல்லை பகுதிகள் உள்நாடுகள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும். சில எல்லை பகுதிகள் எதிரி நாடுகளால் மட்டும் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இது போன்ற சர்வ்தேச எல்லைகள் என்பது சர்வதேச கூட்டமைப்பு, உலக நாடுகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட எல்லை ஆகும்.

இங்குதான் ஜம்முவின் பராக்வால் செக்டாரில் உள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதேபோல் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டை பாகிஸ்தான் நடத்தி உள்ளது. இதற்கு இந்தியா உடனுக்குடன் பதிலடி கொடுத்தது. நேற்று நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி தாக்குதல்களை நடத்தியது. சுமார் 40 நிமிடங்கள் இரண்டு பக்கமும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+