இந்தியாவை முடக்க சீனா பெரிய சதி.. கூட்டணியில் பாகிஸ்தான் + வங்கதேசம்.. நெருங்கும் பேராபத்து
டெல்லி: ஆசிய கண்டத்தில் நம் நாடு பொருளாதாரம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் ஆசியா மட்டுமின்றி உலகளவில் நம் நாட்டின் புகழ் உச்சத்துக்கு சென்று வருகிறது. இதனை விரும்பாத அண்டை நாடுகள் நம் நாட்டை முடக்கவும், தனிமைப்படுத்தவும் பெரிய பிளானை கையில் எடுத்துள்ளன. இந்த சதி திட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தான், சீனா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் இணைந்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நம் நாடு உலகளாவிய பொருளாதாரத்தில் 4வது இடத்தில் உள்ளது. அதேபோல் பாதுகாப்பு துறை உள்பட பல துறைகளில் வேகமாக முன்னேறி வருகிறது. இதனால் ஆசியா மட்டுமின்றி உலகளவில் பல்வேறு நாடுகளும் நம்முடன் வர்த்தகம் செய்வதோடு, நட்பு பாராட்டி வருகின்றனர். ஆனால் நம் அண்டை நாடுகளை எடுத்து கொண்டால் நிலைமை வேறு.

நம்மிடம் இருந்து பிரிந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளது. வங்கதேசமும் தற்போது பொருளாதார நெருக்கடி, சட்டம் - ஒழுங்கு சீர்க்குலைவு உள்ளிட்டவற்றால் உலக நாடுகள் மத்தியில் மதிப்பிழந்துள்ளது. சீனாவை எடுத்து கொண்டால் தன்னை விட பொருளாதாரத்தில் நலிவடைந்த நாடுகளுக்கு கடன் கொடுத்து அவர்களை முடக்குவதும், அதன்பிறகு அந்த நாடுகளின் வளங்களை கொள்ளையடிப்பையும் வாடிக்கையாக வைத்துள்ளது.
ஆனால் நம் நாடு எல்லா நாடுகளிலும் நேர்மையான உறவை பின்பற்றி வருகிறது. இதனால் பல நாடுகளும் நம் நாட்டுடன் சேர்ந்து தளவாடங்கள் தயாரிக்கவும், வர்த்தகம் செய்யவும் தயாராகி வருகின்றன.
ஆசியாவில் நம் நாட்டின் அசுர வளர்ச்சியை விரும்பாத சீனா பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது நம் பரம எதிரியான பாகிஸ்தானையும் புது எதிரியான வங்கதேசத்தையும் கூட்டு சேர்த்து நம்மை தனிமைப்படுத்தும் வேலையில் சீனா தொடங்கி உள்ளது.
இந்த 3 நாட்டில் வங்கதேசத்தில் ேஷக் ஹசீனா பிரதமராக இருந்தவரை நம் நாட்டுடன் நல்ல உறவு இருந்தது. கடந்த ஆண்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றது முதல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு நம் நாட்டுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான உறவு சரிவை சந்தித்துள்ளது. நம் நாட்டின் புதிய எதிரியாக இப்போது வங்கதேசம் மாறி உள்ளது. சீனா, பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி நமக்கு ஸ்கெட்ச் போடும் வேலையில் வங்கதேசம் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் பாகிஸ்தானுக்கும், நமக்கும் காலம் காலமாக மோதல் உள்ளது. பாகிஸ்தான் நம்மை நேரடி எதிரியாக பார்க்கப்படுகிறது. ஆனால் சீனா நம்மை எதிரியாக பார்ததாலும் கூட அதனை வெளிப்படையாக அறிவித்தது கிடையாது. நம்முடன்
நல்லுறவு பேண விரும்புவது போல் காட்டிக்கொண்டு நயவஞ்சகமாக சீனா செயல்படும். இதனால் பாகிஸ்தானை விட சீனா தான் நமக்கான பெரிய அச்சுறுத்தலாகும்.
இப்படியாக நம் நாட்டை சுற்றி உள்ள 3 நாடுகளும் நம்மை தனித்தனியாக எல்லையில் சீண்டி வருகின்றன. இப்போது இந்த 3 சதிகாரர்களுக்கு ஒரே அணியில் உள்ளன. சில நாட்களுக்கு முன்பு சீனாவின் குன்மிங் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் நம் நாட்டின் சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அதேபோல் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இதில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பற்றிய கண்டிப்பு எதுவும் இல்லை. அதேவேளையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் தாக்குதல் தொடர்பான தகவல் இருந்தது. பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக நடக்கும் தாக்குதலுக்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் தெரிவித்து வரும் நிலையில் இது இடம்பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்நாத் சிங் கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்தார்.
இது ஒருபுறம் இருக்க குன்மிங்கில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் பங்கேற்ற முத்தரப்பு பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நம் நாட்டை டார்கெட் செய்து அந்த நாட்டு பிரதிநிதிகள் பேசி உள்ளனர்.
ஆசியாவில் தங்களுக்குள் ஒத்துழைப்பை அதிகரித்து விட்டு, இந்தியாவை தனிமைப்படுத்துவது என்று பேசி உள்ளன. அதுமட்டுமின்றி செயல்படாத சார்க் கூட்டமைப்புக்கு பதில் இந்தியா இல்லாத புதிய கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதில் சார்க் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாடுகளையும் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். இந்தியாவை நிராகரிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளன.
இப்படியொரு கூட்டமைப்பு உருவாக சாத்தியம் இருக்கிறதா என்றால், நிச்சயம் இருக்கிறது. ஏனென்றால் சார்க் கூட்டமைப்பு மொத்தமாக முடங்கிவிட்டது. தெற்காசிய நாடுகள் இடையே பிராந்திய ஒத்துழைப்பு, வர்த்தகத்தை மேம்படுத்த 1985ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது தான் சார்க் கூட்டமைப்பு.
முதலில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, பூடான், நேபாளம், இலங்கை ஆகிய 7 நாடுகள் இருந்தன. 2007ல் ஆப்கானிஸ்தான் இணைந்தது. இதன்மூலம்
தெற்காசிய நாடுகள் இடையே கல்வி, பொருளாதாரம், நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்த இந்த அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வந்தது. இதில் இந்தியா முக்கிய பங்களிப்பு செய்தது.
கடைசியாக 2014ம் ஆண்டு காத்மாண்டில் இதன் பிரதிநிதிகள் கூடினர். அதன் பிறகு சார்க் கூட்டமைப்பு நடைபெறவில்லை. 2016ல் நம் நாட்டில் உரி பயங்கரவாத தாக்குதல் நடந்தது. உரி ராணுவ தளத்துக்குள் புகுந்த 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். 3 நிமிடத்தில் ராணுவ தளம் மீது 17 குண்டுகளை போட்டனர்.
17 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். 4 பயங்கராவாதிகளும் தீர்த்து கட்டப்பட்டன. மேலும் பாகிஸ்தானுக்குள் நுழைந்து நம் படைகள் தாக்குதல் நடத்தின. இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது.
இதற்கிடையே தான் சார்க் மாநாடு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. உரி தாக்குதலை காரணம் காட்டி இந்தியா பங்கேற்க மறுத்தது. நம் நாட்டை போலவே இலங்கை, பூடான், வங்கதேசம் (சேக் ஹசீனா பிரதமராக இருந்த காலம்) ஆகிய நாடுகளும் பங்கேற்க மறுத்தது. அதன்பிறகு இன்று வரை சார்க் கூட்டமைப்பு நடைபெறவில்லை. இப்படி சார்க் கூட்டமைப்பை முடக்கிய இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான், வங்கதேசம் விரும்புகிறது. இதனால் சார்க் அமைப்புக்கு புத்துயிர் அளிக்க இருநாடுகளும் கூறி வந்தன. இது தெற்காசிய நாடுகளிடம் எடுபடவில்லை.
இதனால் தற்போது பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை சீனாவுடன் சேர்ந்து சார்க் கூட்டமைப்புக்கு பதில் இந்தியா இல்லாமல் பிற சார்க் உறுப்பு நாடுகளை ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளது. இதுபற்றிய கேள்விக்கு வங்கதேசம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் இணைந்து தெற்காசியாவில் நம் நாட்டை தனிமைப்படுத்த புதிய அமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இதை பாகிஸ்தான் பத்திரிகைகள் உறுதி செய்துள்ளன. இதனால் இந்தியா சுதாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் இலங்கை, மாலத்தீவு உள்பட பிற நாடுகளை ஓரணியில் திரட்டி நம் நாட்டுக்கு எதிரான வேலைகளில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் இறங்கலாம். எனவே
இப்படி இந்தியாவை கவுன்ட்டர் செய்ய பாகிஸ்தான், வங்கதேசத்தை வைத்து சீனா ஆரம்பித்து இருக்கும் இந்த ஆட்டத்தை நம் நாடு உடனடியாக தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நம் நாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கலாம் என்றும், இந்தியா சுதாரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications