இந்தியாவை சீனா வீழ்த்த முடியுமாம்! மாஜி ராணுவ அதிகாரி புத்தகத்தில் வார்னிங்! ராகுல் காந்தி பரிந்துரை
டெல்லி: இந்தியா-சீனா இடையே அவ்வப்போது சில உரசல்கள் மேலெழுந்து வரும் நிலையில், ஒருவேளை இந்தியாவின் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தால் அதை வெறும் 10 நாட்களிலேயே அந்நாட்டு ராணுவத்தால் சாதித்துவிட முடியும் என முன்னாள் ராணுவ அதிகாரி எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் இது முக்கியமான புத்தகம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரி பிரவின் சாவ்னி எழுதிய 'கடைசிப் போர்: சீனாவுடனான இந்தியாவின் இறுதி மோதலை AI(செயற்கை நுண்ணறிவு) எவ்வாறு வடிவமைக்கும்' (The Last War: How AI Will Shape India's Final Showdown with China) எனும் புத்தகம் குறித்து ராகுல் காந்தி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ள இந்த புத்தகத்தின் முகப்பு அட்டையில் "ஒரு முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் வாசிக்க வேண்டிய புத்தகம் இது" என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் பூடான் எல்லைப்பகுதியில் சீனா தனது பலத்தை தொடர்ந்து அதிகரிக்கத்தொடங்கியது. குறிப்பாக டோக்லாம் எனும் பகுதியை குறிவைத்து இந்த கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. பூடானின் டோக்லாம் பீடபூமி என்பது புவியியல் ரீதியாக முக முக்கியமான பகுதி. அரசியல் வரலாற்றில் இது கோழி கழுத்துப் பகுதி என்றழைக்கப்படும். டோக்லாம் பீடபூமியை சீனா கைப்பற்றிவிட்டால் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளும் சீனா வசமாகிவிடும் என்பது பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து.
ஆகையால் டோக்லாம் பீடம்பூமியை இலக்கு வைத்து பல ஆண்டுகளாக சீனா காய்நகர்த்தி வருகிறது. 2017-ம் ஆண்டு டோக்லாம் பீடபூமியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் டோக்லாம் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. இப்பதற்றம் 73 நாட்கள் நீடித்தன. இந்நிலையில் டோக்லாமை அவ்வளவு எளிதாக விட்டுவிடப்போவதில்லை என சீனா கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. இந்த பகுதியில் உள்ள அமோ சூ நதிக்கரையில் பிரம்மாண்ட கிராமம் ஒன்றையே சீனா ராணுவம் தற்போது உருவாக்கி இருப்பதை செயற்கைக் கோள் வரைபடங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.
இந்த கிராமங்களில் பொதுமக்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றன. இந்நிலையில் தற்போது ராகுல் காந்தி எல்லைப் பிரச்னை குறித்து தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த எல்லைப்பிரச்னை குறித்து பிரவின் சாவ்னி எழுதிய The Last War: How AI Will Shape India's Final Showdown with China எனும் புத்தகத்தின் முன்னுரையில் ராகுல் காந்தி "இது சரியான நேரத்தில் வாசிக்கப்பட வேண்டி முக்கியமான புத்தகம்" என்று கூறியுள்ளார். இந்த புத்தகத்தில், ஒரு வேளை இந்தியாவின் லடாக், டோக்லாம் உள்ளிட்ட பகுதிகளின் மீது சீனா ஆக்கிரமிப்பு தாக்குதல் நடத்தினால் அதை 10 நாட்களில் வெற்றிகரமாக அவர்கள் முடித்துவிடுவார்கள் என எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "பிரவின் சாவ்னியின் கருத்துடன் நாம் ஒத்து போகலாம் அல்லது மாறுபடலாம். ஆனால் நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் கொந்தளிப்பான காலங்களைப் பற்றிய பிரவின் சாவ்னியின் முழுமையான மற்றும் சிக்கலான பகுப்பாய்வு தொகுப்பு, ஒரு முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று" என குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் இந்தியாவின் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசங்களை கைப்பற்ற நினைத்தால் அதை குறைந்த உயிர்ச்சேதத்துடன் சீனாவால் செய்து முடித்துவிட முடியும் என்று கூறுகிறது.
அதே வேளையில் இந்தியா இதை மீட்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடியும் என்று எழுத்தாளர் பிரவின் கூறியுள்ளார். இந்த தோல்விக்கு இந்திய ராணுவம் தவறான போருக்கு தயாராகி வருவதே காரணம் என்றும் பிரவின் குறிப்பிட்டுள்ளார். இந்த எதிர்கால போர் 1991 வளைகுடா போரை நினைவூட்டுவதாக இருக்கும் என்றும், இதில் உயர்தர தொழில்நுட்பத்தை சீனா இந்திய ராணுவத்திற்கு எதிராக பயன்படுத்தும் என்பதையும் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.
பிரவீன் மேலும் கூறியுள்ளதாவது, "அமெரிக்க ராணுவ வீரர்களின் யுத்திகள் முற்றிலும் நவீனமயமானவை. அந்நாட்டு போர் நெட்வொர்க்குகள் சென்சார்களை வீரர்களுடன் இணைத்துள்ளன. இதன் மூலம் தாக்குதல் துல்லியமாகவும் உயிர் சேதங்கள் குறைவாகவும் இருக்கும். இதேபோலதான் இந்தியாவுடன் சீனா தனது போரை மேற்கொள்ளும். சீனா தரப்பில் செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பல டொமைன் செயல்பாடுகள், கற்பனையான போர் கருத்துக்கள் மற்றும் மனிதர்களை விட புத்திசாலித்தனமான ரோபோக்கள் பயன்படுத்தப்படும். இது உலகையே பிரமிக்க வைக்கும்."
"2017 டோக்லாம் நெருக்கடிக்குப் பிறகு, உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் தனது படைகளை நிரந்தரமாக சீனா அதிகரிக்கச் செய்தது. அப்போதிலிருந்து அந்நாட்டு ராணுவம் ஆக்கிரமிப்புக்கு தயாராகி வருகிறது." என்று கூறினார். மேலும் "2014லிருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எதிர்ப்பு தற்போது சீனா,பாகிஸ்தான்-இந்தியா என மாறியுள்ளது. நாம் பாகிஸ்தானுடன் மட்டுமல்ல சீனாவுக்கு எதிராகவும் அனைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து களமாட தயாராக இருக்க வேண்டும்" என ராகுல்காந்தியின் கருத்தையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
டோக்லம் சர்ச்சை அதற்கு முன்னர் 'பாங்காங் த்சோ' சர்ச்சை என சீனாவின் அத்துமீறல்கள் குறித்து தொடர்ந்து ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்து வரும் நிலையில் இந்த புத்தகம் வெளியாக இருக்கிறது. மேலும், சீன செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்களை இந்திய ராணுவத்தால் எளிதில் சமாளிக்க முடியாது என எழுத்தாளர் அழுத்தம் திருத்தமாக பதிவிட்டுள்ளார். எது எப்படியாயினும் எந்த தாக்குதலுக்கும் இந்திய ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா












Click it and Unblock the Notifications