டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முழு சுதந்திரம்.. எதற்கும் தயாராக இருங்கள்.. முப்படைக்கு பறந்த உத்தரவு.. பாதுகாப்பு துறை திட்டம்?

இந்தியாவின் முப்படைகள் அனைத்தும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும், மோசமான சூழ்நிலைக்கு கூட இந்தியாவின் முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

லடாக்: இந்தியாவின் முப்படைகள் அனைத்தும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும், மோசமான சூழ்நிலைக்கு கூட இந்தியாவின் முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகிறது.

நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.

இந்த தாக்குதலை தொடர்ந்து நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை மேஜர்கள் மற்றும் முப்படை தளபதி பிபின் ராவத் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். எல்லை நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

ஆலோசனை

ஆலோசனை

இதை தொடர்ந்து நேற்று இரவே அவர் பிரதமர் மோடியை சந்தித்து விவரங்களை தெரிவித்தார். இந்த சந்திப்பில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் , ஜெய்சங்கர், அமித் ஷா, ராஜ்நாத் சிங் இந்த மீட்டிங்கில் உடன் இருந்தனர். இதில் இந்தியா - சீனா இடையே இனி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை. எல்லையில் பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் இல்லை என்று ராஜ்நாத் சிங் கூறியதாக தகவல்கள் வருகிறது.

தயார் நிலை

தயார் நிலை

இந்த நிலையில் இந்தியாவின் முப்படைகள் அனைத்தும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும், மோசமான சூழ்நிலைக்கு கூட இந்தியாவின் முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படை எல்லாம் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் வீரர்களை மூன்று படைகளும் தயாராக வைத்து இருக்க வேண்டும் .

லோக்கல் படை எப்படி

லோக்கல் படை எப்படி

படைகளை முன்னோக்கி செல்ல தயார்படுத்த வேண்டும். எல்லையில் இருக்கும் லோக்கல் படைகள் தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது. நிலைமைக்கு ஏற்றபடி அவர்கள் நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எல்லையில் ஏதாவது பிரச்சனை வந்தால் அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். விதிகளுக்கு ஏற்ப சுதந்திரமாக செயல்பட அளிக்கப்படுகிறது என்று பாதுகாப்பு துறை முப்படைகளிடம் தகவல் தெரிவித்ததாக கூறுகிறார்கள்.

திபெத் எப்படி

திபெத் எப்படி

அதோடு திபெத் பகுதியில் இந்தியா பாதுகாப்பை அதிகரித்துள்ளது. திபெத் வழியாக சீனா ஊடுருவல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் தற்போது இந்தியா - திபெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையை ராணுவத்திற்கு கீழ் கொண்டு வர இந்தியா முடிவு செய்து வருகிறது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை தொடர்பான அறிவிப்புகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்கிறார்கள்.

English summary
China standoff with India: Defense Ministry asks forces to prepare to ready for worst situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X