என்னது.. எல்லையில் படைகள் விலகியதா.. நம்ம நியூசை பார்த்து சீன மக்கள் சிரிக்கிறாங்க- சீண்டும் சு.சாமி
டெல்லி: எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் இருபுறங்களிலும் இந்தியா, சீனா படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதாக மோடி அரசு கூறியதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை கண்டு சீன மக்கள் சிரிப்பதாக பாஜக முன்னாள் எம்.பி. சுப்பிரமணிய சாமி தெரிவித்து உள்ளார்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள், சாலைகளை கட்டியது. இந்த புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக லடாக்கின் கைலாஷ் பகுதியில் சீனாவின் ஊடுருவலை இந்திய பாதுகாப்பு படைகள் தடுக்க முயன்றபோது மோதல் ஏற்பட்டது. அப்போது கைலாஷ் பகுதியில் சில இடங்களும் கிடைத்தன.

சீனா அத்துமீறல்
அதன் பின்னர் இருநாட்டு படைகளை மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டன. இதனை பயன்படுத்தி சீனா இந்திய எல்லை பகுதிகளில் கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் லடாக்கில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பேன்காங் சோ பகுதியில் சீனா வேகமாக நகரத்தை உருவாக்கி வருகிறது.

சாலைகள், கோபுரங்கள்
பேன்காங் ஏரியின் தெற்கு பகுதியை இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் எல்லைக்கு உட்பட்ட ருடோக் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ள அந்நாட்டு படைகளின் முகாமுக்கு அருகே இப்பகுதி இருக்கிறது. மேலும் இந்திய எல்லைக்கு உட்பட்ட பேன்காங் சோ பகுதியில் கோபுரங்களையும் சீனா அமைத்து இருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தின் மூலம் தெரியவந்தது.

பாலம் அமைப்பு
அத்துடன் 15 மீட்டர் நீளம் கொண்ட நீர் வழி பாலம் ஒன்றையும் சீனா அமைத்து வருகிறது. அத்துடன் குடியிருப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன. பேன்காங் ஏரியில் சீனாவின் எல்லைக்கு உட்பட்ட வடக்கு பகுதியில் இதற்கு தேவையான கட்டுமான பொருட்கள், கருவிகள் போன்றவை குவிக்கப்பட்டு இருப்பதையும் செயற்கைகோள் படங்கள் தெளிவாக காட்டுகின்றன.

இந்தியா விளக்கம்
"செயற்கைக்கோள் புகைப்படத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் பாலம் அமைந்து இருக்கும் பகுதியை கடந்த 60 ஆண்டுகளாக சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்து இருக்கிறது. இத்தகையை சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்." என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்து உள்ளது.

சுப்பிரமணிய சாமி ட்வீட்
இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்பி சுப்பிரமணிய சாமி, "எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் இருபுறங்களிலும் இந்தியா, சீனா படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதாக மோடி அரசு கூறியதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை கண்டு சீன மக்கள் சிரிக்கிறார்கள். உண்மை: சீனா இந்திய நிலத்திலிருந்து வெளியேறியது. இந்தியாவும் சீன நிலத்திலிருந்து வெளியேறியது. சீனா சொல்வது: எங்களுடையதும் எங்களுக்கு, உங்களுடையதும் எங்களுக்கு." என்று பதிவிட்டு உள்ளார்.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications