வழிநெடுக கண்ணீர்.. தலைவர்கள் அஞ்சலி.. மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் உடல் ராணுவ மரியாதையோடு தகனம்
பிபின் ராவத் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது
டெல்லி: நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகாவின் உடல் இன்று டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. இலங்கை, பூடான், நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் ராணுவத் தளபதிகள் இந்த இறுதி சடங்குகளில் பங்கேற்றனர்.
Recommended Video
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு கண்ணீர்விட்டபடி வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என்று முழக்கமிட்டனர்.குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதில், பிபின் ராவத் உட்பட, 13 பேர் பலியாகினர். பலத்த காயம் அடைந்த ஒருவர் பெங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

துயரம்
இந்தியாவையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தவண்ணம் உள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராணுவ நடைமுறைகள் முடிந்தபிறகு, பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் நேற்று டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது..

பிரதமர் மோடி
அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, 2:00 மணிக்கு பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது... இலங்கை, பூடான், நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் ராணுவத் தளபதிகள் இந்த இறுதி சடங்குகளில் பங்கேற்றுள்ளனர்...காமராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக தற்போது எடுத்துச் செல்லப்படுகிறது.. வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளனர்.. வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என்று பொதுமக்கள் உணர்ச்சிபெருக்குடன் முழக்கமிட்டு வருகின்றனர்... மாலை 4:00 மணியளவில், பிரார் சதுக்கம் இடுகாட்டில், பிபின் ராவத், அவருடைய மனைவியின் உடல் எரியூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம்
அடையாளம் காணப்படும் வரை, மற்ற 10 பேரின் உடல்கள் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று காலை 11:00 மணிக்கு, டெல்லி காமராஜ் மார்க் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது... பகல் 12:30 மணியில் இருந்து 1:30 மணி வரை ராணுவத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அரசு மரியாதை
அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, 2:00 மணிக்கு பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது... இலங்கை, பூடான், நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளின் ராணுவத் தளபதிகள் இந்த இறுதி சடங்குகளில் பங்கேற்றனர்... மராஜ் மார்க் வழியாக டெல்லி கன்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக தற்போது எடுத்துச்செல்லப்பட்டது.. வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு கண்ணீர்விட்டபடி வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என்று பொதுமக்கள் உணர்ச்சிபெருக்குடன் முழக்கமிட்டனர்... மாலை 4:00 மணியளவில், பிரார் சதுக்கம் இடுகாட்டில், பிபின் ராவத், அவருடைய மனைவியின் உடல் எரியூட்டப்பட்டது. முழு ராணுவ மரியாதைக்கு பின் உடல் எரியூட்டப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications