நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டா ராஜனுக்கு கொரோனா
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டா ராஜனுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பை தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்தவர் சோட்டா ராஜன். 2015ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் பாலி தீவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டார்.
தாவூத் இப்ராஹிமுடன் சோட்டா ராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டு இந்தியாவில் பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டிருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்னர் சோட்டா ராஜன் மீது வழக்குகள் நிறைய உள்ளன. எனினும் அவரை போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை.

சோட்டா ராஜன்
இந்தியாவில் இருந்தால் கைதாகிவிடுவோம் என்பதால் சோட்டாராஜன் 1988 ல் துபாயில் செட்டிலானார். அங்கிருந்தபடியே சோட்டா ராஜன் தனது கூட்டாளிகளுக்கு நாசவேலைகளை சொல்ல சொல்ல அவர்கள் செய்து வந்தனர். தாவூத்திடம் இருந்து சோட்டா ராஜன் விலகியதும் 2000-ஆம் ஆண்டில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.

திஹார் சிறை
இதையடுத்து சோட்டா ராஜன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சோட்டா ராஜனுக்கு கொரோனா
2011 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளரை கொலை செய்த வழக்கில் 2018 இல் இவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திஹார் சிறையின் அதிகாரி சிறப்பு நீதிமன்றத்தை தொடர்பு கொண்டு சோட்டா ராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கொரோனா உறுதி
இதனால் காணொலி மூலம் அவரால் ஆஜராக முடியாது. அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோட்டா ராஜன் சிறையில் யாரையும் பார்க்க அனுமதி கிடையாது, மற்ற கைதிகளும் அவரை தொடர்பு கொள்ள முடியாது. இந்த நிலையில் இவருக்கு எப்படி கொரோனா உறுதியானது என தெரிவில்லை.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications