டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோர்ட் உத்தரவை அரசுகள் மதிக்காமல் இருப்பது.. ஜனநாயகத்திற்கு எதிரானது.. தலைமை நீதிபதி ரமணா பேச்சு!

Google Oneindia Tamil News

டெல்லி: அரசுகள் கோர்ட் உத்தரவுகளை மதிக்காமல் இருப்பது இந்தியாவின் ஜனநாயத்திற்கு எதிரானது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 39-வது மாநாட்டில் தலைமை நீதிபதி ரமணா பேசி உள்ளார்.

டெல்லியில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 39-வது மாநாடு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் தொடங்கியது. மாநில முதல்வர்களின் பிரதிநிதிகள் , பிரதமர் மோடி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

4 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. ஆளுநர் ரவியின் 4 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. ஆளுநர் ரவியின்

நேற்று டில்லி விஞ்ஞான் பவனில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த மாநாட்டில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் முன்னிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா உரையாற்றினார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

நேற்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா, நீதிமன்றங்களில் இருக்கும் வெற்றிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இதற்கான பரிந்துரைகளை உடனே உயர் நீதிமன்ற நீதிபதிகள் மேற்கொள்ள வேண்டும். பல இடங்களில் நீதிமன்றங்களில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதை உடனே நிரப்ப வேண்டும். அப்போதுதான் வழக்குகளை முடிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில், இன்று பிரதமர் மோடி முன்னிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசினார். அதில், இப்போதெல்லாம் பொது நல வழக்குகள் அதிகம் போடப்படுகிறது. ஆனால் பொதுநல வழக்குகள் பொது நலத்திற்கு பதிலாக தனி நலத்திற்காக போடப்பட்டு வருகிறது. இதை பலர் தவறாக பயன்படுத்த தொடங்குகிறார்கள்.

பொது நல வழக்கு

பொது நல வழக்கு

சிலர் மீது அழுத்தம் கொடுக்கவும், திட்டங்களை நிறுத்தவும் பொது நல வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. அதிகரிக்கும் பொது நல வழக்குகள் ஒரு பிரச்சனை. பொது நல வழக்குகள் மக்களுக்கு உதவுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதை சிலர் தவறாகவும் பயன்படுத்துகிறார்கள். இது போன்ற வழக்குகளை கோர்ட் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இது போன்ற வழக்குகளை கோர்ட் ஆதரிக்காது.

லட்சுமண ரேகை

லட்சுமண ரேகை

கோர்ட் உத்தரவுகள் மீது சில அரசு அமைப்புகள், அரசுகள் முறையாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றன. கோர்ட் உத்தரவுகளை மதிக்காமல் இருப்பது இந்தியாவின் ஜனநாயத்திற்கு எதிரானது. நமது அரசியலமைப்பு சட்டம் குடியரசுத் தலைவர், நீதிமன்றம், பாராளுமன்றங்கள் ஆகியோருக்கான அதிகாரங்களை பிரித்துக்கொடுத்துள்ளது. இந்த அமைப்புகள் தங்களுக்கான அதிகாரங்களை முறையாக பயன்படுத்த வேண்டும். அதே சமயம் இந்த அமைப்புகள் தங்களுக்கு இருக்கும் அதிகார எல்லையை தாண்ட கூடாது.

 எல்லை கோடு

எல்லை கோடு

ஒரு அமைப்பு இன்னொரு அமைப்பின் அதிகாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும். யாரும் லட்சுமண ரேகையை மீற கூடாது. உத்தரவுகளை போடும் போது லட்சுமண ரேகையை மீறாமல் உத்தரவுகளை பிறப்பிப்பதே அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நல்லது என்று தலைமை நீதிபதி ரமணா இந்த மாநாட்டில் பேசினார். தலைமை நீதிபதி ரமணா இந்த உரையை நிகழ்த்தும் போது பிரதமர் மோடி மேடையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
CJI Ramana talks about of 'Lakshman Rekha' during his meeting with PM, CM today. கோர்ட் உத்தரவுகளை மதிக்காமல் இருப்பது இந்தியாவின் ஜனநாயத்திற்கு எதிரானது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் 39-வது மாநாட்டில் தலைமை நீதிபதி ரமணா பேசி உள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X