டெல்லி மாநகராட்சி கூட்டம்: ஆம் ஆத்மி Vs பாஜக மோதல்.. பறந்த வாட்டர் பாட்டில்.. இதுக்கு எண்டே கிடையாதா

ஆம் ஆத்மி கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி அது மோதலாக வெடித்தது. இரு தரப்பினரும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பேப்பர் உருண்டையை கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி மேயர் தேர்தலையடுயத்து நடைபெற்ற நிலை குழு உறுப்பினருக்கான தேர்தல் கடும் அமளியில் முடிந்துள்ளது. ஆம் ஆத்மி மற்றும் பாஜகவினர் மாறி மாறி குற்றம்சாட்டி தண்ணீர் பாட்டில்களை கொண்டு தாக்கிக்கொண்டனர்.

டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த டிசம்பரில் நடந்து முடிந்த நிலையில், மொத்தமுள்ள 250 தொகுதிகளில் ஆம் ஆத்மி 134 வார்டுகளிலும், பாஜக 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை ஆட்சி செய்து வந்த பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தியுள்ளது. இதனையடுத்து மாநகராட்சி அவையின் முதல் கூட்டம் தொடங்கப்பட்டது. இந்த முதல் கூட்டத்தில் மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது விதி.

எனவே தேர்தலை நடத்த சத்ய சர்மாவை தேர்தல் அதிகாரி, தற்காலிக அவைத் தலைவராகவும் துணைநிலை ஆளுநர் சக்சேனா நியமித்தார். இதற்கு ஆம் ஆத்மி அதிருப்தி தெரிவித்திருந்தது. சத்ய சர்மா பாஜக ஆதரவாளர் என்றும் அவரை எப்படி தேர்தல் அதிகாரியாக நியமிக்கலாம்? என்றும் கேள்வியெழுப்பியிருந்தது. இதனையடுத்து சத்ய சர்மா 10 நியமன கவுன்சிலர்களை நியமித்தார். அத்துடன் இவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் என்றும் அறிவித்தார்.

 நிலைக்குழு உறுப்பினர்

நிலைக்குழு உறுப்பினர்

இந்த விஷயத்தில் தங்களிடம் ஆலோசிக்காமல் எப்படி நியமன கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்று கேள்வியெழுப்பிய ஆம் ஆத்மி இவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்றும் கூறினர். ஆனால் சத்ய சர்மா இதில் உறுதியாக இருந்ததால் கடந்த 3 முறை தேர்தல் நடத்த முயன்றபோது அவையில் சலசலப்பு ஏற்பட்டதால் தேர்தலை நடத்த முடியவில்லை. இதனையடுத்து ஆம் ஆத்மி உச்சநீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆம் ஆத்மியின் வாதத்தை ஏற்று நியமன கவுன்சிலர்கள் வாக்களிக்க முடியாது என்ற கூறியது. மேலும் தேர்தல் நடத்த உரிய தேதியை 24 மணி நேரத்திற்குள் அறிவிக்க வேண்டும் என்றும் கூறியது.

தேர்தல்

தேர்தல்

இதனையடுத்து நேற்று நான்காவது முறையாக டெல்லி மாநகராட்சி அவை கூடியது. முதலில் மேயருக்கான வாக்குப்பதிவும், பின்னர் துணை மேயருக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் எனும் 39 வயதான பேராசிரியை 34 வாக்குகள் வித்தியாசத்தில் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை மேயராக முகமது இக்பால் 31 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக 15 ஆண்டுகளுக்கு பின்னர் மேயர் பொறுப்பை பறிகொடுத்தது. இதனையடுத்து நிலைக்குழு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதுவரை அமைதியாக இருந்த அவை, இந்த வாக்குப்பதிவின் போது அமளியில் ஈடுபட்டது.

அமளி

அமளி

பாஜகவினர் இத்தேர்தலை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி அது மோதலாக வெடித்தது. இரு தரப்பினரும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பேப்பர் உருண்டையை கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்து மேயர் ஷெல்லி ஓபராய் கூறுகையில், "உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தலை நடத்த முயற்சிக்கையில் பாஜகவினர் என்னை தாக்க முயன்றனர். அவர்கள் ஒரு பெண் மேயரை தாக்க முயன்றார்கள்" என்று கூறியுள்ளார்.

 வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

ஆனால் பாஜக தரப்பில், "இந்த விஷயத்தில் தீர்வு காண அவர்கள் எங்கள் பேச்சை கேட்டு எங்களுடன் கலந்துரையாட வேண்டும் என்பதை கூறதான் நாங்கள் மேயர் அருகே சென்றிருந்தோம்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலைக்குழு தேர்தில் ஆம் ஆத்மி 6 இடங்களையும் பாஜக மூன்று இடங்களையும் வெல்ல வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+