ஊழலை பற்றி பேசுவதற்கு முன் வாயை டெட்டால் ஊற்றி கழுவுங்க.. காங். எம்பிக்களை விளாசிய நிர்மலா சீதாராமன்

ஊழலை பற்றி காங்கிரஸ் எம்பிக்கள் பேசுவதை மிக கடுமையாக விமர்சித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன்பாக காங்கிரஸ் எம்பிக்கள் தங்களது வாயை டெட்டால் ஊற்றி நன்கு கழுவ வேண்டும் என ராஜ்யசபாவில் கடுமையாக சாடினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்ற பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பேசியதாவது: 2023-24-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையானது வளர்சியை மையமாகக் கொண்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார மைனஸ் 23 என்ற நிலைமைக்கு போனது. மத்திய அர்சின் இடைவிடாத முயற்சியால் பொருளாதாரம் மீட்சி அடைந்துள்ளது. மத்திய அரசின் வரிவருவாய் பங்கு மாநில அரசுகளுடன் உரிய வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

Clean your mouth with Dettol..Finance Minister Nirmala Sitharaman slams Congress on Corruption

காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் ஊழலைப் பற்றி பேசுவதுதான் விந்தையாக உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் ஊழலைப் பற்றி பேசுவதற்கு முன்னர் டெட்டால் ஊற்றி வாயை கழுவ வேண்டும். அப்படி டெட்டால் ஊற்றி வாயை கழுவினாலும் சுத்தமாகிவிடாது. ராஜஸ்தான் மாநிலத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அம்மாநில முதல்வர் கடந்த ஆண்டு பட்ஜெட்டை வாசித்துள்ளார். தவறுகள் நிகழ்வது இயல்பானதுதான். ஆனால் இப்படியான ஒரு பிழையை இனியாரும் செய்யக் கூடாது என கடவுளை பிரார்த்திக்கிறேன்.

முன்னதாக ராஜ்யசபாவில் பிரதமர் மோடி நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பதிலளித்தார். அந்த விவாதத்தின் போது காங்கிரஸை கடுமையாக சாடினார் பிரதமர் மோடி. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 50 முறை மாநில அரசுகளைக் கலைத்தவர் என விமர்சித்தார் மோடி. என்னதான் சேற்றை எங்கள் மீது வாரி இறைத்தாலும் அந்த சேற்றிலும் தாமரை மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றார் பிரதமர் மோடி.

ராஜ்யசபாவில் மொத்தம் 90 நிமிடங்கள் நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி இரு அவைகளிலும் குடியரசுத் தலைவரின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உரை நமது தேசத்திற்கே வழிகாட்டுகிறது. அவருடைய உரை பெண்கள் சக்திக்கு உத்வேகம் அளித்து, இந்தியாவின் பழங்குடியின சமுதாயத்திற்கு தன்னம்பிக்கையை வளர்த்து பெருமை கொள்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. நமது நாடு தீர்மானத்துடன் கூடிய வெற்றி பெறுவதற்கு விரிவான செயல்திட்டத்தை குடியரசுத் தலைவர் அளித்துள்ளார் என்று கூறினார்.

சவால்கள் வரலாம், ஆனால் 140 கோடி இந்தியர்களின் உறுதிப்பாட்டின் மூலம் நமது தேசம் அனைத்து தடைகளிலிருந்தும் மீண்டு வரும் என்று பிரதமர் தெரிவித்தார். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் இயற்கை சீற்றங்களின் போது நம்நாடு அதனை எவ்விதம் எதிர்கொண்டது மற்றும் போர்க்கால சமயங்களில் ஒவ்வொரு இந்தியரும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். அதுபோன்ற கடினமான காலக்கட்டத்திலும் இந்தியா உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார் பிரதமர் மோடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+