டெல்லியில் புது வீட்டில் குடியேறும் ராகுல்! ஷீலா தீக்சித்தின் அதிர்ஷ்ட இல்லமே இதுதான்! என்ன சிறப்பு?
டெல்லி: மோடி பெயர் சர்ச்சை தொடர்பான அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் டெல்லியில் அவருக்கு வழங்கப்பட்ட அரசு இல்லம் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் தான் மறைந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித்தின் அதிர்ஷ்டமான இல்லத்தில் ராகுல் காந்தி குடியேற உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இந்த வேளையில் அவர் கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரசாரத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து மோடி சமுதாயத்தை ராகுல் காந்தி இழிவுப்படுத்தியதாக கூறி குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த கிரிமினல் அவதூறு வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் அவரது எம்பி பதவி பறிபோனது. மேலும் ராகுல் காந்தி துக்ளக் லேன் பகுதியில் குடியிருந்த அரசு பங்களாவை காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டது. ராகுல் காந்தியும் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அரசு பங்களாவை காலி செய்தார். அதன்பிறகு ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தாய் சோனியா காந்தியின் இல்லத்தில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே பலரும் டெல்லியில் உள்ள தங்களின் இல்லத்தை ராகுல் காந்தி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவரிடம் கூறி வந்தனர். மேலும் ராகுல் காந்தி விவகாரத்தில் மத்திய அரசு உள்நோக்கத்துடன் விரைவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் டெல்லியில் நிஜாமுதின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ராகுல்காந்தி விரைவில் குடியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த வீடு மறைந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலாதீட்சித் குடும்பத்திற்கு சொந்தமானதாகும். இதனால் ராகுல் காந்தி விரைவில் தாய் சோனியா காந்தியின் வீட்டில் இருந்து வெளியேறி புதிய வீட்டில் வசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ராகுல் காந்தி புதிதாக குடியேற உள்ள இந்த வீடு தெற்கு டெல்லியில் உள்ள பி2 நிஜாமுத்தீன் கிழக்கு தெருவில் அமைந்துள்ளது.
இந்த வீட்டில் தற்போது ஷீலா தீக்சித்தின் மகன் சந்தீப் தீக்சித் உள்ளார். ராகுல் காந்தி இங்கு குடியேற உள்ளதால் சந்தீப் தீக்சித் வேறு வீட்டுக்கு இடம்பெயர உள்ளார். மேலும் ராகுல் காந்தி குடியேற உள்ள வீடு 3 பெட்ரூம்களை கொண்டுள்ளது. மறைந்த ஷீலா தீக்சித் தனது இறுதி காலத்தில் இங்கு தான் வசித்தார்.
இந்த வீட்டை ஷீலா தீக்சித் 1991ம் ஆண்டில் வாங்கினார். இந்த வீட்டில் அவர் 1991 முதல் 1998 வரை வசித்து வந்தார். இது அவருக்கு அதிர்ஷ்ட வீடாகவே அமைந்து இருந்தது. 1998ல் டெல்லி முதல்வரானார். அதன்பிறகு தொடர்ந்து 15 ஆண்டுக்கும் அதிகமாக 2013 வரை அவர் டெல்லி முதல்வராக இருந்தார். அதன்பிறகு கேரளா ஆளுநராக செயல்பட்டார்.
இதற்கிடையே தான் 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற ஷீலா தீக்சித் தனது இறுதிக்காலத்தை 2015ல் இருந்து இந்த வீட்டில் தான் கழித்தார். இத்தகைய சூழலில் தான் ஷீலா தீக்சித் வீட்டில் ராகுல் காந்தி குடியேற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications