காங். கலகங்கள் புதிதில்லை..பைலட், பிரசாதா குடும்பத்துக்கு கை வந்த கலை-அப்பாக்கள் வழியில் மகன்களும்!
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்குள் இந்திரா காந்தி குடும்பத்தின் தலைமைக்கு எதிராக அப்பாக்களைப் போல மகன்களும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்பது தொடர் கதையாக இருக்கிறது.
இந்திரா மறைவுக்குப் பின்னர் காங்கிரஸின் ஒற்றை முகமாக விஸ்வரூபம் எடுத்து நின்றார் ராஜீவ் காந்தி. அவருக்கு வலதுகரங்களாக இருந்தவர்களில் ராஜேஷ் பைலட்டும் ஒருவர்.
ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கு எதிராக முறைப்பு காட்டியவர்; கட்சிக்குள்ளேயே போர்க்குரல் தூக்கியவர் ராஜேஷ் பைலட். என்னதான் ராஜீவ் காந்தியின் மனைவி என்றாலும் சோனியா அன்னிய நாட்டவர் என்ற கோஷத்தை ஏற்றுக் கொண்டவர் ராஜேஷ் பைலட்.

அன்று ராஜேஷ் பைலட்
இதனாலேயே சோனியாவின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தலில் சீதாராம் கேசரிக்கு எதிராக போட்டியிட்டார். தோல்வி அடைந்தார். பின்னர் சோனியா காந்தியை எதிர்த்தும் போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள்ளாகவே சாலை விபத்தில் ராஜேஷ் பைலட் மரணமடைந்தார்.

மாஜி தலைவர் ஜிதேந்திர பிரசாதா
ராஜேஷ் பைலட்டின் சகாதான் ஜிதேந்திர பிரசாதா. இவரும் சோனியாவின் தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியவர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தலில் சோனியாவுக்கு எதிராக போட்டியிட்டு தோற்றார். ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. பின்னர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இன்று மகன்கள் கலக குரல்
அன்று ராஜேஷ் பைலட்டும் ஜிதேந்திர பிரசாதாவும் ஏற்றிய போர்க்கொடிகளை பரம்பரையாக அவர்களது மகன்களான சச்சின் பைலட்டும் ஜிதின் பிரசாதாவும் தொடருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் தனது தந்தையின் சமகால அரசியல் தலைவரான அசோக் கெலாட் அரசுக்கு வில்லனாக வரிந்து கட்டிக் கொண்டு நின்றார் ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் பைலட். இதனால் ராஜஸ்தானில் ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டது.

இன்று சச்சின், ஜிதேந்திர பிரசாத்
பின்னர் பெரும் போராட்டங்கள், களேபரங்களுக்கு மத்தியில் இப்போது சச்சின் பைலட் அமைதியடைந்திருக்கிறார். ஜிதேந்திர பிரசாதாவின் மகன் ஜிதின் பிரசாதா, சோனியாவுக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஒருவர். அதனால் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச காங்கிரஸ் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அப்பாவைப் போல மகனும் இதேவேலையாகத்தான் இருக்கிறார் என இறுகிய முகத்துடன் ஜிதின் பிரசாத்துக்கு எதிராக இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர். ஜிதின் பிரசாத்துக்கு மூத்த தலைவர்கள் கபிசிபல் உள்ளிட்டோரும் ஆதரவு தருகின்றனர்.
வாரிசுகளாலேயே வாரிசுகளுக்கு பஞ்சாயத்து!
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications