நேரு குடும்பத்தை இழிவாக பேசுவதா? பிரதமர் மோடிக்கு எதிராக காங். உரிமை மீறல் தீர்மான நோட்டீஸ்!
பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளது.
டெல்லி: முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்தை இழிவாக பேசியதாக பிரதமர் மோடிக்கு எதிராக ராஜ்யசபாவில் உரிமை மீறல் தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளது காங்கிரஸ்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி அண்மையில் லண்டன் சென்றிருந்தார். லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட ஜனநாயகக் கட்டமைப்புகள் கடுமையாக ஒடுக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயகத்துக்கு குரல்கள் அடக்கப்படுகின்றன என விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்தை பாஜக கடுமையாக கண்டித்தது. வெளிநாட்டில் இந்தியா குறித்து ராகுல் காந்தி பேசுவது கண்டனத்துக்குரியது என்றார் பிரதமர் மோடி. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வின் தொடக்க நாளிலேயே லோக்சபாவில், ராகுல் காந்தி பேச்சுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங். ராகுல் காந்தியின் வெளிநாட்டு விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைக் கண்டிக்க வேண்டும் என்றார் ராஜ்நாத்சிங். இதேபோல ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராகுலுக்கு எதிராக கடுமையாக பேசினார். அத்துடன் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கடந்த 5 நாட்களாக ஆளும் பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்துள்ளனர். இதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள், அதானி குழும மோசடிகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என வலியுறுத்தினர். இந்த அமளியால் கடந்த 5 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் முடங்கிவிட்டன.

இந்நிலையில் ராஜ்யசபாவில் இன்று பிரதமர் மோடிக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் கேசி வேணுகோபால், உரிமை மீறல் தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த கூட்டத் தொடரின் போது பேசிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் நேரு மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி குடும்பத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இதனால் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் நோட்டீஸ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications