ராகுல் காந்தி தீவிரவாதியா? மத்திய அமைச்சர் பிட்டு கொடும்பாவி எரித்து டெல்லியில் காங்கிரஸ் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி என விமர்சித்த மத்திய அமைச்சர் ரன்வீத் சிங் பிட்டுவுக்கு எதிராக டெல்லியில் இன்று காங்கிரஸ் தொண்டர்கள் ஆவேசப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்திக்கு எதிரான பாஜக தலைவர்களின் விமர்சனங்களைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் மத்திய அமைச்சர் ரன்வீத் சிங் பிட்டுவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு இந்தியர்களிடையே பேசுகையில், சீக்கியர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார். இந்தியாவில் சீக்கியர்கள் ஒடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.

congress rahul gandhi bjp

ராகுல் காந்தியின் சீக்கியர் உரிமைக்கான ஆதரவு பேச்சுக்கு இந்தியாவில் சீக்கியர்களுக்ககு தனிநாடாக காலிஸ்தான் கோரும் பிரிவினைவாத இயக்கங்கள் ஆதரவு தெரிவித்தது சர்ச்சையானது. குறிப்பாக இந்தியாவால் தேடப்படுகிற முக்கிய தீவிரவாதி பன்னூன், ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தது பாஜகவினரை கொந்தளிக்க வைத்தது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரன்வீத் சிங் பிட்டு, காங்கிரஸ் கட்சியினர்தான் சீக்கியர் தாய்மார்களையும் சிறுமிகளையும் தெருக்களில் பலாத்காரம் செய்து கொன்றழித்தனர்; சீக்கியர் தலைப்பாகைகளை அகற்றி முடியை மழித்தனர். ராகுல் காந்தியின் பேச்சு இந்தியாவில் பிரிவினையைத் தூண்டுகிறது. ராகுல் காந்திதான் இந்தியாவின் நம்பர் 1 தீவிரவாதி என காட்டமாக பேசியிருந்தார். இதேபோல பாஜக தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தனர்.

நாட்டின் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் வெளிநாடுகளில் போய் இந்தியாவுக்கு எதிராக பேசுகின்றனர் என விமர்சித்தார். பிரதமர் மோடியும், வெளிநாடுகளுக்குப் போய் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கப் பார்க்கின்றனர் என சாடியிருந்தார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று திடீரென காங்கிரஸ் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு மத்திய அமைச்சர் ரன்வீத் சிங் பிட்டுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். மத்திய அமைச்சரின் இல்லம் எதிரே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, போலீசாரின் தடுப்புகள் மீது ஏறி நின்று மத்திய அமைச்சர் ரன்வீத் சிங்குக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் திடீரென மத்திய அமைச்சர் ரன்வீத் சிங் பிட்டுவின் கொடும்பாவியையும் எரித்தனர் காங்கிரஸ் கட்சியினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+