அடுத்த விக்கெட்.. விரைவில் பாஜகவில் ஐக்கியம்? ஜேபி நட்டாவை சந்தித்த காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்பியுமான ஆனந்த் சர்மா, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசியுள்ளதாகவும், இமாச்சல் பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இவர் பாஜகவில் இணையலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் மேலிடம் மீது அதிருப்தியில் உள்ளனர். இவர்கள் அவ்வப்போது வெளிப்படையாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருகின்றனர்.
அதிருப்தி தலைவர்களான காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளான குலாம் நபி ஆசாத் உள்பட பலர் ஜி 23 குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.

ஜேபி நட்டாவுடன் சந்திப்பா?
இதில் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த எம்பி ஆனந்த் சர்மாவும் ஒருவர். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் மாநிலங்களவை எம்பியாக உள்ளார்.
இந்நிலையில் தான் ஆனந்த் சர்மா நேற்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசியுள்ளதாகவும், விரைவில் அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

பாஜகவில் இணைய வாய்ப்பா?
மேலும் இமாச்சல் பிரதேசத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள தொடர்ந்து பாஜகவில் இணைந்து வரும் நிலையில் ஆனந்த் சர்மாவும் பாஜகவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால ஆனந்த் சர்மாவின் இந்த சந்திப்பு பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இடையே பேசும்பொருளாகி உள்ளது.

சந்திக்க முழு உரிமை உண்டு
ஆனால் இதனை ஆனந்த் சர்மா மறுத்துள்ளார். இதுபற்றி ஆனந்த் சர்மா கூறுகையில், ‛‛பாஜகவின் ஜேபி நட்டாவை சந்திக்க எனக்கு முழு உரிமை உண்டு. அவரை நான் வெளிப்படையாகவே சந்திப்பேன். இதில் மறைவு எதுவும் இருக்காது. ஏனென்றால் நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் இருந்து வந்துள்ளோம். கொள்கை ரீதியாக எதிர்ப்பாளராக இருப்பதால் எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் பகை இருப்பதாக அர்த்தமில்லை.

குடும்ப ரீதியாக உறவு
ஜேபி நட்டாவுடன் எனக்கு சமூக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் உறவுகள் உள்ளன. இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்தோம். எனது மாநிலம் மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த ஒருவர் ஆளும் கட்சியின் தலைவராக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். எங்களுக்கு இத்தகைய உறவு உள்ள நிலையில் வெறும் அரசியல் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்க கூடாது'' என்றார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!











Click it and Unblock the Notifications