களேபரத்துக்கு நடுவே.. நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தி.. ‛‛மன்னிப்பு’’ பற்றிய கேள்விக்கு ‛கூல்’ பதில்

லண்டன் சுற்றுப்பயணத்தின்போது ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் பற்றி பேசிய நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் நாடாளுமன்றத்தில் கூறி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராகுல் காந்தி லண்டன் சென்று இந்தியாவின் ஜனநாயகம் குறித்து பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்திய ஜனநாயகம் குறித்து தவறான முறையில் வெளிநாட்டில் பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் நாடாளுமன்ற இருசபைகளிலும் கூறி வந்தனர். இந்நிலையில் தான் லண்டனில் இருந்து திரும்பிய ராகுல்காந்தி இன்று நாடாளுமன்றம் வந்திறங்கினார். அப்போது பாஜகவினர் மன்னிப்பு கோர கூறுவது பற்றிய கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்த நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு துவங்கும் சபை நடவடிக்கைகள் கவனம் பெற உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. தற்போது கேரள மாநிலம் வயநாடு எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் ராகுல் காந்தி லண்டன் சென்றார்.

அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் பேசினார். அப்போது அங்கு அவர் இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என மத்திய அரசை விமர்சனம் செய்து பேசியிருந்தார். இது விவாதத்தை ஏற்படுத்தியது.

4வது நாளாக முடக்கம்

4வது நாளாக முடக்கம்

மேலும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தின் 2வது அமர்வு கூட்டம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டம் தொடங்கியது முதல் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்ற இருசபைகளும் இன்று 4வது நாளாக முடங்கியது.

நாடாளுமன்றம் வந்த ராகுல்

நாடாளுமன்றம் வந்த ராகுல்

இந்நிலையில் தான் லண்டனில் இருந்து நாடு திரும்பிய ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றம் வந்தார். சபைகள் முடங்கி உள்ளதால் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தார். அப்போது லண்டன் பேச்சு தொடர்பாக பாஜகவினர் மன்னிப்பு கோர வேண்டும் என கூறுகின்றனரே? என ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தார்.

ராகுல் காந்தி பதில்

ராகுல் காந்தி பதில்

இதுபற்றி ராகுல் காந்தி கூறுகையில், ‛‛நான் இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. என்னை அனுமதித்தால் அதுபற்றி நாடாளுமன்றத்திலேயே விளக்கம் அளிப்பேன். அப்போது நான் நினைப்பதை கூறுவேன்'' என பதிலளித்தார். இதன்மூலம் ராகுல் காந்தி மன்னிப்பு கோரமுடியாது எனவும், தனது பேச்சின் சாராம்சம் பற்றி விளக்கம் மட்டுமே அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கவனம் பெறும் நாளைய கூட்டம்

கவனம் பெறும் நாளைய கூட்டம்

நாடாளுமன்றத்தின் 2வது அமர்வு இன்றோடு சேர்த்து 4 நாட்கள் முடங்கி உள்ளது. இந்த 4 நாட்களும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வரவில்லை. நாளை 5வது நாளாக நாடாளுமன்றம் காலை 11 மணிக்கு துவங்க உள்ளது. இதில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார் என்பதால் நாளைய கூட்டத்தொடர் அதிக கவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+