மோடி- அதானி முகமூடிகளுடன் காங்கிரஸ் எம்பிக்கள்..நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் நடத்திய 'ஓரங்க நாடகம்'!
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்றும் அதானி விவகாரத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினர். அதானி ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக் கோரி நாள்தோறும் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இன்றைய போராட்டத்தின் போது மோடி- அதானி முகமூடி அணிந்த காங்கிரஸ் எம்பிக்களிடம் ராகுல் காந்தி கேள்விகள் மேல் கேள்விகளை கேட்டு அதகளப்படுத்தினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாளில் இருந்தே அதானி ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இந்த கோரிக்கையை எதிர்க்கட்சி எம்பிக்கள் முன்வைத்து அமளியில் ஈடுபடுவதும் பின்னர் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் வழக்கமாகிவிட்டது. இன்றும் நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் பிற்பகலுக்கு மேல் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

முன்னதாக இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வழக்கம் போல அதானி விவகாரத்தை முன்வைத்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சப்தகிரி சங்கர் உலகா ஆகியோர் பிரதமர் மோடி மற்றும் அதானியின் உருவம் பொறித்த முகமூடிகளை அணிந்திருந்தனர்.

இப்போராட்டத்தில் இணைந்த லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மோடி-அதானி முகமூடி அணிந்த காங்கிரஸ் எம்பிக்களை போட்டோக்கள் எடுத்தார். பின்னர் செல்போனில் வீடியோ எடுத்த ராகுல் காந்தி, 'உங்க இருவருக்கும் என்ன தொடர்பு?' என மோடி- அதானியை கிண்டல் செய்யும் வகையில் கேள்விகளையும் கேட்டார். அதற்கு மோடி- அதானி முகமூடி அணிந்த காங்கிரஸ் எம்பிக்கள் இருவரும், நாங்கள் எதனைச் செய்தாலும் ஒன்றாகவே செய்வோம். எங்களிடையேயான உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது' என கிண்டலாகப் பதிலளித்தனர்.

மேலும் நாடாளுமன்றம் ஏன் முடக்கப்பட்டுள்ளது எனவும் ராகுல் காந்தி கேள்வி கேட்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சபைக்கு வரவில்லை என கிண்டலடித்தனர். அத்துடன் அதானி முகமூடி அணிந்த எம்பியோ, நான் என்ன சொன்னாலும் அதை இவர் செய்வார் என மோடி முகமூடி அணிந்த எம்பியை சுட்டிக்காட்டி குறிப்பிட்டார். இந்த 'ஓரங்க நாடகம்' நாடாளுமன்ற வளாகத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது. இந்த ஓரங்க நாடக வீடியோவையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி

यह एक ख़ास और पुराना रिश्ता है! #ModiAdaniEkHai pic.twitter.com/s6iF1YeCcX
— Rahul Gandhi (@RahulGandhi) December 9, 2024
அதேநேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்பிக்கள் இன்றையப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications