அதிரடி.. காங்கிரஸ் காரிய கமிட்டி அதிரடி மாற்றம்! தமிழகத்தை சேர்ந்தோரில் யாருக்கு இடம் தெரியுமா?
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் காரிய கமிட்டி குழு அதிரடியாக மாற்றம் செய்து மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ள நிலையில் அதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்
காங்கிரஸ் கட்சி கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் இருந்து சறுக்கலை சந்தித்து வருகிறது. 2014, 2019 ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது. மேலும் பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தது.

இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சியும் உணர்ந்துள்ளது.
இதனால் தான் காங்கிரஸ் மீட்டெடுக்கும் வகையில் ராகுல் காந்தி கடந்த ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை நடத்தினார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அவர் நடந்து சென்றார். இதையடுத்து இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
இதனால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் பாஜகவை வீழ்த்த 26 கட்சிகள் ஒன்றாக இணைந்து ‛இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டணியில் உள்ளது. இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பலன் அளிக்கும் என கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸின் காரிய கமிட்டி குழுவை மாற்றியமமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழு தான் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி குழுவில் மொத்தம் 39 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, ஏகே அந்தோனி, அம்பிகா சோனி உள்ளிட்டவர்கள் உள்ளனர்.
மேலும் திக்விஜய்சிங், ப சிதம்பரம், முகுல் வாஸ்னிக், அஜய் மாக்கான், பிரியங்கா காந்தி, சசி தரூர், ரன்தீப் சுர்ஜேவாலா, சல்மான் குர்ஷித், ஜெய்ராம் மரேஷ், சச்சின் பைலட், கேசி வேணுகோபால் உள்பட 39 தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து ப சிதம்பரம் மட்டும் காங்கிரஸ் கட்சியின் காரியகமிட்டி குழுவில் இடம்பெற்றுள்ளார்.
அதேபோல் நிரந்த அழைப்பாளர்களாக (Permanent Invitees) வீரப்பமொய்லி, ஹரிஷ் ராவத், ஹரிபிரசாத், மணிஷ் திவாரி உள்பட 18 பேர் உள்ளனர். மேலும் பொறுப்பாளர்களாக தமிழகத்தை சேர்ந்த செல்லக்குமார், பக்தா சரண்தாஸ், அஜய் குமார், ஹரிஷ் சவுத்ரி, ராஜீவ் சுக்லா உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications