Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லையில் நம் நிலத்தை ஆக்கிரமிக்க சீனாவுக்கு மத்திய அரசு பாஸ் வழங்கி உள்ளது - கொந்தளித்த காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம்முடைய நிலப்பரப்பை சீனா அத்துமீறி ஆக்கிரமித்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் காங்கிரஸ் குற்றச்சாட்டை ஜெய்சங்கர் முற்றிலுமாக மறுத்த நிலையில் காங்கிரஸ் கட்சி அவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. அதோடு இந்திய நிலத்தை ஆக்கிரமித்து கொள்ள ஜெய்சங்கர் சீனாவுக்கு இலவச பாஸ் வழங்குவதாக சாடியுள்ளது.

சீனா அவ்வப்போது நம் நாட்டுடன் எல்லையில் வாலாட்டி வருகிறது. குறிப்பாக எல்லையில் இந்திய வீரர்களுடன் சண்டையிடுவது, எல்லை கட்டுப்பாட்டு கோட்டை மீறி நுழைவது உள்ளிட்ட விஷயங்களை செய்து வருகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

Congress slams Jaishankar s after his remark that China has not occupied any of our land is akin to giving another free pass

அதேபோல் நமக்கு சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சீனா வரைபடத்தில் அருணாச்சல பிரதேசத்தை இணைத்து வெளியிடுவது, அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளுக்கு தனி பெயரிட்டு அழைப்பது உள்ளிட்ட தேவையில்லாத வேலைகளை சீனா செய்து வருகிறது.

குறிப்பாக கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா இடையே மோதல் நடந்தது. இந்த மோதலை தொடர்ந்து தான் சீனா சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே தான் எல்லையில் இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, ‛‛அருணாசல பிரதேச எல்லைக் கட்டுப்பாடு அருகே ராணுவம் கண்காணிப்பில் உள்ளது. அருணாசல பிரதேசம் என்பது இந்தியாவில் ஒரு அங்கம் தான். அதனை யாராலும் பிரிக்க முடியது. ஒருவரின் வீட்டின் பெயரை நான் மாற்றினால் அது எனக்கு சொந்தமாகிவிடுமா? அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவது உரிமை கொண்டாடுவது ஆகாது'' என்றார்.

இந்நிலையில் தான் ஜெய்சங்கரின் இந்த விளக்கத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கூட்டாக பாஜகவை கடுமையாக எதிர்த்துள்ளனர். மேலும் அவர்கள் ஜெய்சங்கரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛2020ல் கல்வான் மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். அப்போது பிரதமர் மோடி சீனாவுக்கு ‛க்ளீன்ஷீட்' கொடுத்தார்.

அதேபோல் இப்போது 56 இன்ச் நீளமான சீன பிளிங்கர்களை அணிந்து கொண்டு மீண்டும் சீனாவுக்கு மோடி அரசு இந்திய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய இலவச பாஸ் வழங்கி உள்ளது. பிரதமர் மோடியின் வெளியுறவுத்துறை அமைச்சர் சீனா நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை எனக்கூறி ‛க்ளீன்ஷீட்' கொடுக்கிறார். இது இந்திய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய சீனாவுக்கு வழிவகுக்கும். எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள், எல்லையில் ராணுவ கட்டமைப்புகளை உருவாக்குவது தொடர்பாக மோடி தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பொய் சொல்லி வருகிறார்.

மேலும் சீனாவை சேர்ந்தவர்களுடன் எதற்காக 19 சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது? இந்தியாவுக்கான சீன இறக்குமதியை அதிகரிப்பதற்காகவா? அல்லது சீனாவின் 3000 நிறுவனங்களிடமிருந்து PM CARE நிதியை பெறுவதற்காகவா?. மேலும் பேச்சுவார்த்தை சரியாக நடந்த இருந்தால் ஏன் 2020க்கு முந்தைய அமைதியான சூழல் திரும்பவில்லை?

டெப்சாங் சமவெளி, டெம்சோக் நல்லா மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா போஸ்டில் உள்ள பல ரோந்துப் பகுதிகளுக்கு இந்தியாவுக்கு ஏன் இன்னும் அனுமதி மறக்கப்ட்டுள்ளது? சீனா விஷயத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? சாந்தமான போக்கை கடைப்பிடிப்பது ஏன்? சீனா விஷயத்தில் பிரதமர் மோடியின் அமைதி என்பது தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆபத்தில் தள்ளிவிடும்'' என தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛நம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய சீனாவுக்கு மத்திய அரசு விட்டு கொடுக்கிறது. 2020 ஜூன் 19ல் பிரதமர் மோடியும், 2024 ஏப்ரல் 9ல் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சீனாவுக்கு ‛க்ளீன்ஷீட்' கொடுத்துள்ளனர். நம் நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில் எல்லையில் நமக்கு பின்னடைவு ஏற்படுகிறது. இந்த செய்திகள் என்பது கல்வானில் மரணமடைந்த நமது வீரர்களுக்கு இழைக்கும் அவமானம் மட்டுமின்றி எல்லையில் சீனா ஆக்கிரமித்துள்ள பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டருக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றதாகும். கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு எல்லையில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனால் மறுப்பு தெரிவிப்பது, சீன நிலஆக்கிரமிப்பை திசைதிருப்பது, பொய்யான தகவல் தருவது உள்ளிட்டவற்றை மட்டுமே மத்திய அரசு செய்து வருகிறது'' என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+