வீறு கொண்டு எழுந்த காங்கிரஸ்.. மத வெறிக்கு எதிராக ஆன்லைன் போராட்டம்.. வரிசைகட்டும் மக்களின் வீடியோ
டெல்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் சாதி, மத வெறுப்பு மோதல்களுக்கு எதிராக ட்விட்டரில் புகைப்படத்தை மாற்றி பிரச்சாரத்தை தொடங்கியுள்ள காங்கிரஸ் கட்சி, பொதுமக்கள் அனுப்பும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.
கர்நாடகா ஹிஜாப் பிரச்சனை, ராமநவமி கலவரங்கள், டெல்லி ஜஹாங்கிர்புரி வீடுகள் இடிப்பு என அடுத்தடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி அமைதியிழக்க செய்கின்றன.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மதவெறிக்கு எதிராக #IndiaAgainstHate என்ற ஹேஷ்டேக்கில் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
|
வெறுப்புணர்வுக்கு எதிராக பிரச்சாரம்
இதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் புரொபைல் படத்தை மாற்றியுள்ள காங்கிரஸ் கட்சி அதில் வாட்ஸ் அப் எண்ணையும் அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள பதிவில், "நம் நாடு வெறுப்பு என்ற பெயரால் பல இழப்புகளை சந்தித்துள்ளது. இனி அதுபோல் நடக்க வேண்டாம். வெறுப்புணர்வுக்கு எதிராக குரல் எழுப்புங்கள். உங்கள் வீடியோக்களை +91 6357118201 என்ற வாட்ஸ் அப் எண் அல்லது [email protected] என்ற இ மெயில் முகவரிக்கு அனுப்புங்கள் என குறிப்பிட்டுள்ளது.
'Not a Hindu, Not a Muslim. First a human, then an Indian.'
— Congress (@INCIndia) April 22, 2022
For the people trying to break this spirit of India, our voice and our choice are very clear. #IndiaAgainstHate pic.twitter.com/nC0dEz5oej
அணிவகுக்கும் வீடியோக்கள்
இதனை தொடர்ந்து சாதி, மத வெறுப்புணர்வுக்கு எதிராக பேசி பொதுமக்கள் அனுப்பும் வீடியோக்களை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் காங்கிரஸ் வெளியிட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தியாவில் நிலவி வரும் வெறுப்புணர்வுக்கு எதிராக பேசி தங்கள் வீடியோக்களை காங்கிரஸின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வருகின்றனர்.

என்ன சொல்கிறது காங்கிரஸ்?
இதுகுறித்து காங்கிரஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, "வெறுப்புணர்வு நம் உயிர்களை சிதைத்துவிட்டது. நம் நாட்டை மூழ்கடிக்கும் வெறுப்பை நசுக்க வேண்டும். சகோதரனுக்கு எதிராக சகோதரனையே நிறுத்துபவர்கள் ஒற்றுமையின் சக்தியை எப்போதும் புரிந்துகொள்வதில்லை. நாம் ஒன்றுபட்டு நின்று பலத்தை அவர்களுக்கு காட்டுவோம். தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை. வெறுப்பு என்னும் புல்டோசர் பலரது வாழ்க்கையை அழித்துவிட்டது. அதை அன்பின் வலிமையால் கட்ட வேண்டும்.

பாரத மாதாவின் குழந்தைகள்
சகோதர சகோதரிகள் இனி ஒருவருக்கு ஒருவர் எதிராக நிற்க மாட்டார்கள். பாரத மாதாவின் குழந்தைகள் இனி அழிப்பதற்காக சண்டையிட்டுக்கொள்ள மாட்டார்கள். வெறுப்புக்கு எதிராக சமரசமின்றி, அச்சமின்றி, இந்தியா ஒற்றுமையாக நிற்கும். அவர்களின் ஆயுதம் வெறுப்பு. அதை வைத்து நம்மை திசை திருப்புவார்கள். நம்மை பிளவுபடுத்துவார்கள். நம்மை அழிப்பார்கள். அவர்களை வெற்றிபெற விடாதீர்கள்.

அதிகரிக்கும் மதக்கலவரங்கள்
2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை மட்டும் சாதி, மத ரீதியில் நடந்த கலவரங்களின் எண்ணிக்கை 3,400. கலவரங்களில் ஈடுபட்டதாக பதிவான வழக்குகள் மட்டும் 2.76 லட்சம். கடந்த அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 வரை மட்டும் 6 வட இந்திய மாநிலங்களில் வெறிப்புணர்வை தூண்டும் வகையில் 92 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

பாஜகவின் அரசியல்
கும்பல் படுகொலைகளில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக மத்திய அரசிடம் எந்த தரவுகளும் இல்லை. அதுமட்டும் இருந்தால் பாஜகவின் வெறுக்கத்தக்க இழிவான அரசியலில் இருந்து சகோதரர்களை பாதுகாக்க ஒவ்வொரு இந்தியனும் வீதியில் இறங்கி இருப்பார்கள். நாம் முதலில் இந்து இல்லை, முஸ்லிம் இல்லை. நாம் அனைவரும் மனிதர்கள். அடுத்து இந்தியர்கள்." எனக்குறிப்பிட்டு உள்ளது.
-
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு! -
நோ இழுபறி.. டெல்லியில் இருந்து அறிவிப்பு வரும்! திமுக - காங். கூட்டணி உறுதி செய்த செல்வப்பெருந்தகை? -
28+1 .. முடிவுக்கு வந்த இழுபறி! திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்தானது -
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் டெல்லிக்கு தந்த ட்விஸ்ட்.. ராகுல் காந்தி ப சிதம்பரத்தை அனுப்பியது ஏன்? -
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகிறதா? இன்றுடன் கெடு முடிகிறது? -
1996 வரலாறு திரும்புதா? சத்தியமூர்த்தி பவனின் ஆவேசமும், அறிவாலயத்தின் பிடிவாதமும்! மைனஸ் திமுகவுக்கா -
கைய குடுங்க..இனிமே நாம ப்ரண்ட்ஸ்! திமுக -காங்கிரஸ் கூட்டணி உறுதி! ராகுலிடம் ப.சி சொன்ன ஒத்த வார்த்தை -
இன்னும் 6 மணி நேரம்தான் இருக்கு.. ஸ்டாலின் சொன்ன டைம்.. பதறிப்போன ராகுல்.. திக்திக் நிமிடங்கள்! -
திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு கை கொடுத்த சிதம்பர முயற்சி.. ஒரே நாளில் பிரச்சனையை முடித்த ப.சிதம்பரம் -
துடித்த சித்தரஞ்சன் சாலை.. ஸ்டாலின் டென்சன்.. உடைந்து போன ராகுல்.. இரவு முழுக்க நடந்தது என்ன? -
Anusha Ravi: பாஜகவில் MLA சீட் கேட்கும் அனுஷா ரவி.. எந்த தொகுதி தெரியுமா? நயினார் சொன்ன பதில்? -
ராஜ்யசபா தேர்தலில் சர்ப்ரைஸ் வைத்த பாஜக.. தேசிய தலைவர் நிதின் நபினுக்கு தேடி வரும் பொறுப்பு












Click it and Unblock the Notifications