டார்கெட் 5 மாநில தேர்தல்! மெகா பிளானை இறக்க போகும் காங்கிரஸ்! டெல்லியில் கூடியது செயற்குழு கூட்டம்
டெல்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியுள்ளது.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான தேர்தல் பணிகளை ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கியுள்ளது.

இவர்கள் அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தித் தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுத்து வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இந்தாண்டு இறுதியில் நடைபெறும் 5 மாநில தேர்தல் அதற்கான அரையிறுதியாகப் பார்க்கப்படுகிறது.
5 மாநில தேர்தல்: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் குறித்த அறிவிப்பு அடுத்து சில நாட்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தேர்தல் குறித்து ஆலோசிக்கக் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று கூடியுள்ளது. இதில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் உத்திகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். தேர்தல் நடக்கும் மாநிலத்தில் தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
திட்டம் என்ன: இது தவிரப் பீகாரில் சாதி வாரியான கணக்கெடுப்பு முடிவுகள் வந்துள்ள நிலையில், அதேபோல நாடு முழுக்க சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர். மக்கள் தொகைக்கு ஏற்ப திட்டங்கள் வகுக்க நாடு முழுக்க சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதையே ராகுல் காந்தி வலியுறுத்துகிறார். இருப்பினும், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு தரப்பினர் இதற்கு ஆதரவாக இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
பாஜகவுக்கு இந்துக்கள் வாக்கு அதிகமாக இருக்கிறது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஓபிசி வாக்குகளைப் பெறக் காங்கிரஸ் இந்த சாதி வாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் ஏற்கனவே சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் ராஜஸ்தானிலும் இது தொடர்பான அறிவிப்பு வந்துவிட்டது. அதேபோல சத்தீஸ்கரிலும் மீண்டும் ஆட்சியை அமைத்தால் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: மேலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள், தலைவர்கள் மீது அமலாக்கத் துறை, வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கும் நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி ஹைதராபாத்தில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதற்கு மறுநாள் தான் தெலுங்கானா தேர்தலுக்காக காங்கிரஸ் 6 முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. இப்போது 3 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications